Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பிரியங்கா சோப்ராவைத் தொடர்ந்து விமர்சிக்கும் சல்மான் கான்

27 மே, 2019 - 17:19 IST
எழுத்தின் அளவு:
Salman-continue-attacking-Priyanka-Chopra

சல்மான் கான் நாயகனாக நடித்துள்ள 'பாரத்' ஹிந்திப் படம் ஜுன் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் முதலில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர் பிரியங்கா சோப்ரா. ஆனால், படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு ஐந்து நாட்கள் முன்னதாக இப்படத்திலிருந்து விலகினார் பிரியங்கா. பின்னர் அவருக்குப் பதிலாக உடனடியாக காத்ரினா கைப்பை நாயகியாக ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பைத் துவக்கினார்கள்.

திடீரென இப்படத்தை விட்டு பிரியங்கா விலகியதை சல்மான் கானால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால், இப்படத்திற்காக அவர் அளிக்கும் பல பேட்டிகளிலும் பிரியங்காவின் திடீர் விலகல் பற்றி விமர்சித்து வருகிறார். அதில் ஒரு பேட்டியில், “பிரியங்கா அவருடைய வாழ்க்கையில் கடினமாக உழைத்திருக்கிறார். ஆனால், அவருடைய வாழ்க்கையின் மிகப் பெரிய படமாக 'பாரத்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த பின், அவர் அமெரிக்கா செல்ல முடிவெடுத்தார். 'பாரத்'ஐ விட 'அமெரிக்கா' போதும் என நினைத்துவிட்டார். பொதுவாக இப்படி ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்தால் கணவரை விட்டு கூட வந்துவிடுவார்கள்,” என சல்மான் கூறியிருக்கிறார்.

தன் படத்தையே வேண்டாமென்று சொல்லிவிட்டு பிரியங்கா சென்றது சல்மானுக்கு கௌரவப் பிரச்சினையாகிவிட்டது. அதனால்தான், இப்போது அவரது கோபத்தை பேட்டிகள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார் என்கிறார்கள். ஆனால், சல்மான் விமர்சனத்திற்கு பிரியங்கா இதுவரை எந்த ஒரு பதிலையும் அளிக்காமல் அமைதியாக இருந்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
துப்பாக்கி முனையில் நடிகையை திருமணம் செய்ய மிரட்டிய இளைஞர்துப்பாக்கி முனையில் நடிகையை ... மோடிக்கு நன்றி சொன்ன அனுராக் காஷ்யப் மோடிக்கு நன்றி சொன்ன அனுராக் காஷ்யப்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

கோகுல், மதுரை ப்ரியங்கா சோப்ரா இவனோட ஏற்கனவே 3 படங்கள் நடித்திருக்கிறார்கள். சக நடிகையையே இவ்வாறு பேசுவது சரியல்ல. மிகவும் கீழ்தரமான அகந்தையுடன் கூடிய பேச்சு.
Rate this:
Allah Daniel - SACRAMENTO,யூ.எஸ்.ஏ
28 மே, 2019 - 06:24 Report Abuse
Allah Daniel சல்மான் கான் பொலிவுட்டில் ஒரு தாதா.. இவரிடம் நடிக்காமல் எந்த நடிகையும் பொலிவுட்டில் முன்னேற முடியாது..ஐஸ்வர்யா ராய்..அசின்..சில உதாரணம்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in