Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராதாரவி நன்றி சொன்னது ஸ்டாலினுக்கா... நயனுக்கா?

26 மே, 2019 - 10:00 IST
எழுத்தின் அளவு:
radha-ravi-speech-about-loksabha-election

ஜீவா நடித்த கொரில்லா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக நடிகர் ராதாரவியை அழைத்திருந்தனர். அவரை பேச அழைத்தனர். வழக்கம்போல, ஏதாவது ஏடாகூடமாகப் பேசுவார் என, பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் அப்படி பேசவில்லை.

நடிகர் கமலை, மறைமுகமாக தாக்கிப் பேசியதுடன், தன்னுடைய பேச்சை முடித்துக் கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது: கூட்டம் கூடி மக்கள் கைத்தட்டினால் போதும் என நினைத்து சிலர் கட்சித் துவங்கி இருக்கின்றனர். நிஜம் அப்படியல்ல என்பதை, நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் உணர்த்தி இருக்கிறது. அதனால், கூட்டத்தைப் பார்த்து யாரும் பிரமித்துப் போய், கட்சியெல்லாம் ஆரம்பிக்க வேண்டாம். இந்த நிஜமெல்லாம் எனக்கு நன்கு புரிந்ததால் தான், நான், கட்சி ஆரம்பிக்கவில்லை.


இந்தத் தேர்தலை, ஒரு பொது ஜனமாக இருந்து முதல் முதலாக பார்த்திருக்கிறேன். அதற்கு, வாய்ப்பு ஏற்படுத்தி தந்தவருக்கு எனது மனமார்ந்த நன்றி. இவ்வாறு ராதாரவி பேசினார்.


தன்னை பொதுஜனமாக தேர்தலை பார்க்க வைத்தவர் என, அவர், தி.மு.க., தலைவர் ஸ்டாலினைச் சொன்னாரா... அல்லது நடிகை நயன்தாராவைச் சொன்னாரா என புரியாமல், விழாவுக்கு வந்தவர்கள் குழம்பியபடியே சென்றனர்.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
அஜித்தை சந்தித்ததால் வாய்ப்பு பெறும் ஜிப்ரான் ?அஜித்தை சந்தித்ததால் வாய்ப்பு ... ரிலீசுக்கு முன்பே இணையதளத்தில் வெளியானது நீயா 2 ரிலீசுக்கு முன்பே இணையதளத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Tamilan - California,யூ.எஸ்.ஏ
27 மே, 2019 - 00:27 Report Abuse
Tamilan இவனே ஒரு கேடுகெட்டவன். இவனெல்லாம் கமலை பேச வந்துட்டான். இவன் கட்சி ஆரம்பிச்சா இவனோட குடும்பம் கூட இவனுக்கு ஓட்டு போடாது
Rate this:
26 மே, 2019 - 18:25 Report Abuse
கண்ணோட்டம் இந்த மூஞ்சி கட்சி ஆரம்பித்தா இவனே ஓட்டுப் போட மாட்டான்! நினைப்பை பாருங்கள்!
Rate this:
Soosaa - CHENNAI,இந்தியா
26 மே, 2019 - 14:27 Report Abuse
Soosaa Kadhai nalla irundhalum thiraikadhai sodhappi vittal bore ayidum adhu madhiri than Ivar pesum karuthu nalla irukkum anaa pesum vidham sodhappi viduvar Ivar kamal patri sonnadhu miga sari indha murai nan moondru idangalil neril Parthen. Ivar varum valiyil Matra Katchi koodaram pottirukkum avarhal Ivar varumbodhu andha katchi Kodi thundu ellathiyum packet la vachukittu kootama varuvargal adhanala niraya kootam serum. Ella katchiyilum ivarukku rasikar ullanar anaa thondargal illai
Rate this:
Abdul Rahman - Madurai,இந்தியா
26 மே, 2019 - 10:36 Report Abuse
Abdul Rahman இவனெல்லாம் ஒரு ஆளா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Bigil
  • பிகில்
  • நடிகர் : விஜய்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :அட்லீ
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in