Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டாக்டர் தொழில் பார்க்கப் போயிருப்பேன்: சாய் பல்லவி

24 மே, 2019 - 18:45 IST
எழுத்தின் அளவு:
I-will-work-as-Doctor-says-Saipallavi

நடிகர் சூர்யா நடிப்பிலும், இயக்குநர் செல்வராகவன் இயக்கத்திலும் உருவாகி இருக்கும் படம் என்.ஜி.கே., இந்தப் படத்தின் படபிடிப்பு முடிந்து, படம் வரும் 31ல் ரிலீசாக இருக்கிறது. படத்திற்கான புரமோஷன் வேலைகள் முழு வேகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், படத்தின் இயக்குநர் செல்வராகவன் எப்படிப்பட்டவர் என்பது குறித்து, படத்தின் கதாநாயகியான நடிகை சாய் பல்லவி பேட்டியில் கூறியிருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது:

படப்பிடிப்பு தளத்துக்கு வருவதற்கு முன், ஒரு கோவிலுக்கு போவது போன்ற தூய்மையான எண்ணத்தோடுதான் வர வேண்டும் என செல்வராகவன் சொல்லி இருக்கிறார். அதனால், அதே எண்ணத்தோடுதான் என்.ஜி.கே., படம் முடியும் வரை சென்றேன்.

நடிப்பு என்றால் இப்படித்தான் என்று நான் நினைத்துக் கொண்டிருந்ததெல்லாம், ஒன்றுமேயில்லை என தூக்கிப் போட வைத்து விட்டார். ஒவ்வொரு நாளும் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று, வீட்டில் ஹோம் ஒர்க் செய்து கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் செல்வேன். ஆனால், அங்கு போனதும், ஷூட்டிங் வேறுவிதமாக நடக்கும்.

தனக்கு திருப்தி ஏற்படும் வரை செல்வராகவன், நடிப்பை வரவழைக்காமல் விடமாட்டார் என்பதை கேள்விபட்டிருந்த எனக்கு ஒரு நாள் கடுமையான சோதனை. எடுக்க வேண்டிய காட்சிகளைச் சொல்லி, என்னை நடிக்கச் சொன்னார். காலையில் இருந்து மாலை வரை ஷூட்டிங் நடந்தது. ஆனால், காட்சி அமைப்புகள் எதிர்பார்த்தபடி வரவில்லை என்றதும், நாளை தொடரும் என சொல்லி விட்டு சென்றார்.

இரவு முழுவதும், என் அம்மாவிடம் சொல்லி அழுதேன். எனக்கு நடிப்பு வரவில்லை. நான், சினிமாவை விட்டு விடுகிறேன். படித்த படிப்புக்கு ஏற்ப, டாக்டர் தொழில் பார்க்க சென்று விடுகிறேன். சென்னையிலோ, கோவையிலோ ஒரு கிளினிக் மட்டும் வைத்துக் கொடுங்கள் என கேட்டேன். சமாதானப்படுத்தினார் அம்மா. பின், காலையில் மீண்டும் ஷூட்டிங். போனேன். ஒரே டேக்கில் ஓகேயாகி விட்டது. இல்லையென்றால், நடிப்பு நமக்கு ஒத்தே வராது என சொல்லி விட்டு, டாக்டர் தொழில் பார்க்கப் போயிருப்பேன்.

இவ்வாறு சாய் பல்லவி கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் ஹன்சிகாவுடன் சிம்புமீண்டும் ஹன்சிகாவுடன் சிம்பு மு.க.ஸ்டாலினை சந்தித்து விஷால் வாழ்த்து மு.க.ஸ்டாலினை சந்தித்து விஷால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

crap - chennai,இந்தியா
18 ஜூலை, 2019 - 07:44 Report Abuse
crap டாக்டர் தொழில் அவ்வளவு கேவலமா போச்சு இவர்களுக்கு. டாக்டருக்கு படிச்சவனெல்லாம் டாகடர் ஆகிட முடியாது என்று இந்த கூத்தாடிக்கு இன்னும் புரியல.
Rate this:
நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ
02 ஜூன், 2019 - 12:12 Report Abuse
நெல்லை மணி, படம் நடிப்பதற்கு எதற்கு டாக்டர் படிப்பு? எத்தனையோ பேர்கள் மருத்துவர்கள் ஆக வேண்டும் என்று கனவுகளோடு இருக்கும்போது ஒரு மருத்துவர் சீட்டை வீணடித்து விட்டாயே? மருத்துவம் படித்தால் மருத்துவம் மட்டும்தான் செய்யவேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும். 200 மருத்துவ சீட்களுக்கு 180000 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
Rate this:
Sekar -  ( Posted via: Dinamalar Windows App )
25 மே, 2019 - 09:47 Report Abuse
Sekar Aduchu vidu kaasa panama.
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
25 மே, 2019 - 04:41 Report Abuse
Mani . V பேசாமல் டாகடர் தொழிலே பார்த்து இருக்கலாம். கொஞ்ச பேர் தான் சாவார்கள். இப்பொழுது சமூகத்தை சீரழித்துக் கொண்டு இருக்கிறது. மாரி 2 படத்தில் இவரது நடன அசைவுகள் அவ்வளவும் கீழ்தரமானவை. )
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Bigil
  • பிகில்
  • நடிகர் : விஜய்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :அட்லீ
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in