Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொய்யாக நடிக்க முடியாது: விசித்ரா

24 மே, 2019 - 18:28 IST
எழுத்தின் அளவு:
I-cant-live-as-fake-says-Actress-Vichitra

கடந்த 2017ல் முதல் முதலில் தமிழில் வெளியான தொலைக்காட்சி தொடர் நிகழ்ச்சி பிக்பாஸ். அது பெரும் வெற்றி பெற்றது. அந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கினார். இதன் இரண்டாம் பாகத்தையும் அவரே தொகுத்து வழக்க, அதுவும் பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து, இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் விரைவில் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. இதையும், நடிகர் கமலே தொகுத்து வழங்கவிருக்கிறார்.

இந்நிலையில் இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இதில் என்னால் கலந்து கொள்ள முடியாது என ஜாங்கிரி மதுமிதா மறுத்து விட்ட நிலையில், ஆனந்தி நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் கவர்ச்சி வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை விசித்ராவும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள மறுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இது குறித்து, நடிகை விசித்ரா கூறியிருப்பதாவது: உலகமே விழிக்கும் முன் விழித்து, பல் துலக்குவதும், தூக்கம் கலையாமல் வீங்கிய முகத்துடன் எழுந்து வந்த நிலையிலேயே குத்துப் பாட்டுக்கு ஆடுவது போல டான்ஸ் போடுவதும் நல்லாவா இருக்கு? இந்த நிகழ்ச்சிக்காக, நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கொடுக்கும் சில்லியான இலக்குகளை அடையப் போராட வேண்டும். நான் நானாக இருக்காமல், வேறு ஒருத்தியாக இருந்து என்னால் பொய்யாக நடிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
புதுப் பாடல்கள் வேற லெவல் : ஜிவி பிரகாஷ்புதுப் பாடல்கள் வேற லெவல் : ஜிவி ... கட்டுக் கோப்பான உடலுக்கு யோகா: அமலா பால் கட்டுக் கோப்பான உடலுக்கு யோகா: அமலா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in