Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தன் தொகுதியைத் தக்க வைத்த பாலகிருஷ்ணா

24 மே, 2019 - 17:06 IST
எழுத்தின் அளவு:
Balakrishna-keeps-his-seats

ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் மற்றும் பார்லிமென்ட் தேர்தல் ஆகியவற்றில் ஆளும் தெலுங்கு தேசக் கட்சி படுதோல்வியைத் தழுவியது. அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு குப்பம் சட்டசபை தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இந்தத் தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் 1,00,146. கடந்த 2014 தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் 1,64,481. இந்த முறை அவருக்கு சுமார் 60 ஆயிரம் வாக்குகள் குறைந்துள்ளன.

சந்திரபாபு நாயுடுவின் மைத்துனரான நடிகர் பாலகிருஷ்ணா, தெலுங்குதேசம் கட்சி சார்பில், இந்துப்பூர் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். 1983ம் ஆண்டிலிருந்து தெலுங்கு தேசக் கட்சி இந்தத் தொகுதியை இழந்ததில்லை. இந்தத் தொகுதியில் தற்போது பாலகிருஷ்ணா 91,704 வாக்குகள் பெற்று 17,028 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், அவருடைய முதல் மருமகன் நர லோகேஷ் மங்களகிரி தொகுதியிலும், இரண்டாவது மருமகன் ஸ்ரீபரத், விசாகப்பட்டிணம் மக்களவைத் தொகுதியிலும் தோல்வியடைந்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் சேதுபதியுடன் நடித்த மகிழ்ச்சியில் பிக்பாஸ் நடிகைவிஜய் சேதுபதியுடன் நடித்த ... தேர்தல் சபதத்தில் தோல்வி : மொட்டை அடித்த இயக்குனர் தேர்தல் சபதத்தில் தோல்வி : மொட்டை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

s t rajan - chennai,இந்தியா
26 மே, 2019 - 01:11 Report Abuse
s t rajan தமிழக மக்கள் எப்போது ஆந்த்ரா மாதிரி இந்த குடும்ப ஒதுக்கீட்டைத் தகர்த்தெறிவாரகள் ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in