Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகை சுமலதா : 52 ஆண்டுகள் கழித்து ஒரு பெண் சுயேச்சையின் வெற்றி

24 மே, 2019 - 13:33 IST
எழுத்தின் அளவு:
After-52-years-independent-woman-canditate-win

கர்நாடக மாநில மாண்டியா பார்லிமென்ட் தேர்தலில் மறைந்த நடிகர் அம்பரிஷின் மனைவியும், நடிகையுமான சுமலதா சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி அவருக்கு சீட் தராமல், கூட்டணிக் கட்சிக்கு சீட் ஒதுக்கியதால் அவர் அங்கு சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்தார். அவரை எதிர்த்து கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டார். நடிகை சுமலதாவுக்கு பாஜகவும் ஆதரவு கொடுத்தது.

மாண்டியா மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் 8 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். 2 எம்எல்சி, மூன்று மந்திரிகள் இருக்கிறார்கள். அவர்கள் கட்சி சார்பாகப் போட்டியிட்டது முதல்வரின் மகன். அப்படியிருந்தும் அவர்களால் அத் தொகுதியில் வெற்றி பெறமுடியவில்லை.

சுமலதாவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ஆதரவு கொடுத்தாகச் சொல்லப்படுகிறது. மேலும் தேவே கவுடா குடும்பத்திலிருந்து வந்துள்ள மூன்றாம் தலைமுறை அரசியல்வாதியான நிகில் குமாரசாமியை அவரது கட்சியினரே விரும்பவில்லை என்றும் சொல்கிறார்கள். அதனால் சுமலதா 1,25,876 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அத் தொகுதியில் குழப்பத்தை ஏற்படுத்த மேலும் சுமலதா என்ற பெயருடன் 3 பெண்களையும் போட்டியிட வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸ பாக்கலாம் போ... - கமலை கிண்டல் செய்த சிவி குமார்பிக்பாஸ பாக்கலாம் போ... - கமலை கிண்டல் ... பிரகாஷ்ராஜை விட அதிக ஓட்டு வாங்கிய மன்சூரலிகான் பிரகாஷ்ராஜை விட அதிக ஓட்டு வாங்கிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Vittal Anand - Chennai,இந்தியா
30 மே, 2019 - 15:56 Report Abuse
Vittal Anand Kumaraswamikku anubavam paththathu.. OPS yidam paadam padiththu makanai vetripera vaiththirukalaam.
Rate this:
LAX - Trichy,இந்தியா
28 மே, 2019 - 02:52 Report Abuse
LAX Congrats Ms.Sumalatha
Rate this:
Soosaa - CHENNAI,இந்தியா
26 மே, 2019 - 12:03 Report Abuse
Soosaa Podhuvaga en manasu thangam nu padi ya hero innum yosichikitte irukaru anaa adhula nadicha ru hero'ne la oruthar Ivar sadhichu kamichuttar inime hero voda train start aguma?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in