Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஆந்திரா : இரண்டு தொகுதிகளிலும் பவன் கல்யாண் தோல்வி

24 மே, 2019 - 13:29 IST
எழுத்தின் அளவு:
Pawan-Kalyan-lost-in-two-place

ஆந்திர மாநில தேர்தலில் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆளும் கட்சியாக இருந்த தெலுங்கு தேசத்திற்கு பெரும் தோல்வியைக் கொடுத்த வாக்காளர்கள் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கும் சேர்த்தே தோல்வியைக் கொடுத்திருக்கிறார்கள்.

ஜனசேனா கட்சியின் தலைவரான பவன் கல்யாண் தான் போட்டியிட்ட கஜுவாகா, பீமாவரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது அவருடைய ரசிகர்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் மிகப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. பவன் கல்யாணின் அண்ணன் நாகபாபுவும் தோல்வியைத் தழுவியுள்ளார்.

பவன் கல்யாண் கஜுவாகா தொகுதியில் ஆட்சியைப் பிடித்துள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளரிடம் 16753 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளார். பீமாவரம் தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளரை விட 8357 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வி அடைந்துள்ளார். இரண்டு தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

பவன் கல்யாண் அண்ணனான சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம் கட்சி ஆரம்பித்து ஒன்றிணைந்த ஆந்திரா தேர்தலில் போட்டியிட்ட போது அவரும் வெற்றி பெற்று, அவரது கட்சியும் 18 இடங்களைக் கைப்பற்றியது. அதோடு ஒப்பிட்டுப் பார்த்தால் பெரும் ரசிகர்களைக் கொண்டுள்ள பவன் கல்யாணை அரசியல் தலைவராக ஆந்திரா மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஆந்திரா தேர்தல் - பாதிப்பை ஏற்படுத்தாத பவன் கல்யாண்ஆந்திரா தேர்தல் - பாதிப்பை ... மோகன்லால் பிறந்தநாளில் ரசிகர்களை குஷிப்படுத்திய பிரித்விராஜ் மோகன்லால் பிறந்தநாளில் ரசிகர்களை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ
28 மே, 2019 - 14:06 Report Abuse
பெரிய ராசு சினிமாவிலே வேணுமுன்னா முதல்வர் இருக்கலாம் நல்ல கரடி மாதிரி இருக்கான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in