Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'டூலெட்' செழியனின் அடுத்தப்படம் எது?

24 மே, 2019 - 12:51 IST
எழுத்தின் அளவு:
Director-Chezhiyans-next-film.?

பிரபல ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் 'டூலெட்'. சினிமா உதவி இயக்குனருக்கு வாடகைக்கு குடியிருக்க வீடு கிடைப்பதில் உள்ள சிக்கலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இப்படம், 30க்கும் மேற்பட்ட சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் பாராட்டுக்களையும் அள்ளியது.

அதே நேரம் இப்படத்திற்கு தமிழகத்திலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 50 நாட்களைக் கடந்து ஓடி இப்படம் வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்தின் மூலம் இயக்குநராக வெற்றி பெற்ற ஒளிப்பதிவாளர் செழியன் அடுத்து எந்த படத்தை இயக்குவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

இந்நிலையில் செழியன் அடுத்து த்ரில்லர் ரக கதை ஒன்றை இயக்க உள்ளார் என்றும், இந்த கதையில் இயக்குனரும் நடிகருமான மிஷ்கினையும், தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷையும் நடிக்க வைத்து இயக்க உள்ளார் என்ற தகவல் அடிபடுகிறது.

செழியன் தரப்பில் கேட்டால், வெளிநாடுவாழ் தமிழர் தயாரிக்கும் படத்தை இயக்க உள்ளதாகவும், அது புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் கதை என்றும் சொல்கிறார்கள். இந்த படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு நடந்து வருகிறது. இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் சொந்தப்படம் எடுக்கும் விஜய்சேதுபதிமீண்டும் சொந்தப்படம் எடுக்கும் ... பிக்பாஸ பாக்கலாம் போ... - கமலை கிண்டல் செய்த சிவி குமார் பிக்பாஸ பாக்கலாம் போ... - கமலை கிண்டல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in