Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஆந்திரா தேர்தல் - பாதிப்பை ஏற்படுத்தாத பவன் கல்யாண்

23 மே, 2019 - 16:15 IST
எழுத்தின் அளவு:
Pawan-Kalyan-loss

பார்லிமென்ட் தேர்தலுடன் சேர்ந்து ஆந்திர மாநிலத்திற்கான சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. அங்கு எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் காட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் நிலைமைக்கு முன்னணி பெற்று வருகிறது. சந்திராபாபு நாயுடுவின் ஆளும் தெலுங்கானா கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பிற்பகல் 2 மணி நிலவரப்ப ஆந்திர மாநிலத்தின் 25 பார்லிமென்ட் தொகுதிகளிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. தெலுங்கு தேசம் கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. சட்டசபை தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் கட்சி 142 தொகுதிகளிலும், தெலுங்கு தேசக் கட்சி 24 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

இந்தத் தேர்தலில் ஆந்திராவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பவன் கல்யாண் மீது மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை. அவருடைய ஜனசேனா கட்சி எந்தத் தொகுதியிலும் முன்னிலையில் இல்லை. அக்கட்சித் தலைவர் பவன் கல்யாண் போட்டியிடும் இரண்டு சட்டசபை தொகுதிகளான பீமாவரம் தொகுதியில் மூன்றாவது இடத்திலும், கஜுவாடா தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்திலும் உள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
திலீப் ரெஸ்டாரண்ட்டில் ரெய்டுதிலீப் ரெஸ்டாரண்ட்டில் ரெய்டு ஆந்திரா : இரண்டு தொகுதிகளிலும் பவன் கல்யாண் தோல்வி ஆந்திரா : இரண்டு தொகுதிகளிலும் பவன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

விமர்சகன் - kovai,இந்தியா
25 மே, 2019 - 10:18 Report Abuse
விமர்சகன் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு துணை நின்று பெரும் போராட்டம் நடத்தி அவர்களுக்கு கிடைக்க வேண்டியதை கிடைக்கச் செய்ய வேண்டும். அதைச் செய்யாமல் மேடைகளில் வெற்று வீர வசனம் பேசுவதும், மக்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் கண்டன அறிக்கை விடுவதும். இதுபோன்று அரசியல் செய்பவர்களை மக்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கின்றனர். இதுதான் தமிழ்நாட்டின் சீமானுக்கும் மக்கள் நீதி மையம் கமலுக்கும் நடந்தது. மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுங்கள் மக்கள் உங்கள் பின்னால் வருவார்கள். 67 ல் திமுக வெற்றி பெற்றதும் இப்படித்தான். மேற்குவங்கத்தில் இடதுசாரிகளை தகர்த்தும் மம்தாவும் இதைத்தான் செய்தார்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in