Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மே 24 போட்டியில் 6 படங்கள்

23 மே, 2019 - 16:13 IST
எழுத்தின் அளவு:
May-24-:-6-movies-releasing

கோடை விடுமுறையின் கடைசி வாரத்தில் இருக்கிறோம். நாளை(மே 23) வெளியாக இருக்கும் படங்களுக்குத்தான் கோடை விடுமுறையின் ஒரு வார காலம் இருக்கிறது. அதனால், நாளைய வெளியீடுகளுக்கு ஓரளவிற்கு வசூலைப் பெறும் வாய்ப்புள்ளது. படங்கள் சரியாக இருந்தால்தான் அந்த வசூல் கிடைக்கும். ஆனால், நாளை வெளியாக உள்ள 6 படங்களுமே சிறிய பட்ஜெட் படங்களாக எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாத படங்களாக இருக்கின்றன.

இவற்றைப் பற்றிய விவரங்கள், யார் நடிக்கிறார்கள் என்பது கூட ரெகுலாக படம் பார்க்கும் ரசிகர்களிடம் சென்று சேர்ந்திருக்குமா என்பது சந்தேகம்தான். தெரிந்த நடிகர்கள் நடித்துள்ள படங்களாக அஞ்சலி நடித்துள்ள 'லிசா' 3டி படமும், ஜெய், லட்சுமி ராய், கேத்தரின் தெரேசா வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள 'நீயா 2' படமும், ஓவியா நடித்துள்ள 'சீனி' படமும் தான் இருக்கின்றன. நாளை வெளியாக உள்ள மற்ற படங்களான 'பேரழகி ஐஎஸ்ஓ, ஔடதம், வண்ணக்கிளி பாரதி' ஆகிய படங்கள் எந்த நட்சத்திர அந்தஸ்தும் இல்லாத படங்களாக வெளிவருகின்றன.

விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர்கள் நாளையும், இந்த வார இறுதி நாட்களிலும் அவர்களது சொந்த ஊருக்குக் கிளம்புவார்கள். அதனால், படங்களைப் பார்க்க தியேட்டர்களுக்கு வரும் மக்கள் கூட்டங்களும் குறைவாக இருக்கும். தேர்தல் முடிவுகளின் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு மக்களுக்கு சினிமா ஆர்வத்தை விட அரசியல் ஆர்வம் அதிகமாக இருக்கும். இதெல்லாமும் நாளை வெளியாக உள்ள படங்களின் வசூலை பாதிக்கலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பணம் முக்கியமில்லை : ஜி.வி.பிரகாஷ்பணம் முக்கியமில்லை : ஜி.வி.பிரகாஷ் தர்பார் - ரஜினியின் வில்லன் சுனில் ஷெட்டி தர்பார் - ரஜினியின் வில்லன் சுனில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in