இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார் | விஜய் மில்டன் படத்தில் ஷாம் | ‛விஜய் 67' பட தலைப்பு லோடிங் : நாளை வருகிறது அறிவிப்பு | இசை படைப்புகளுக்கு சேவை வரியை எதிர்த்த ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷின் மனுக்கள் தள்ளுபடி | 90 சதவீதம் குணமடைந்துவிட்டேன் : விஜய் ஆண்டனி | விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகரின் மகள் | விஜய் படத்திற்காக இளம் நடிகரை சிபாரிசு செய்தாரா மாளவிகா மோகனன் ? | நயன்தாராவின் அடுத்த இரண்டு புதிய படங்கள் | ‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்? | சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? |
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகை ஆனந்தி மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு, அது பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, அதன் இரண்டாவது சீசனும் ஒளிபரப்பப்பட்டு, அதுவும் வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து மூன்றாவது சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. இதையும், நடிகர் கமலே தொகுத்து வழங்குகிறார். இதற்கான புரோமோஷன் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் மெல்ல மெல்ல வெளியாகிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ஜோடி ஷோ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஆனந்தி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கப் போவதாக செய்தி பரவியது. இதை மறுத்து தற்போது அவர் பேட்டியளித்திருக்கிறார். அதில் ஆனந்தி கூறியிருப்பதாவது:
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொள்ள வேண்டும் என என்னை அணுகியது உண்மை. எனக்கு தற்போது, ஒண்ணரை வயதில் மகன் இருக்கிறான். அவனை, என்னுடைய நிகழ்ச்சிகளுக்காக, சூட்டிங் ஸ்பாட்டுகளுக்கு நான் போக வேண்டும் என்றால் கூட, கணவரிடம் ஒப்புதல் வாங்கித்தான் அழைத்துக் கொண்டு போகிறேன். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக நூறு நாட்களுக்கு வீட்டை விட்டு நான் பிரிந்திருக்க வேண்டும் என்பதெல்லாம் இயலாத காரியம். அதனால்தான், வந்த வாய்ப்பை மறுத்து விட்டேன்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.