கீர்த்தி சுரேஷ் 'ஒல்லியாக' மாற இதுதான் காரணம் | என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம் : சிவகார்த்திகேயன் | டிஜிட்டலில் வரும் அஜித்தின் ‛அமராவதி' | மறைமுகமாக தனது அடுத்த படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன் | இது ரகசிய திருமணம் இல்ல ஹேப்பி மேரேஜ் : பிரியங்கா விளக்கம் | பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ் | திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா |
அருண்ராஜா காமராஜ் இயக்கிய 'கனா' படதில் ஹீரோவாக அறிமுகமானவர் தர்ஷன். அந்தப் படத்தைத் தொடந்து தர்ஷன் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'தும்பா'. தர்ஷனுக்கு ஜோடியாக கீர்த்தி பாண்டியன் நடித்திருக்கிறார். இவர் நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகள்.
இயக்குனர் துரை செந்தில் குமாரின் உதவியாளரான ஹரீஷ் ராம் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத், விவேக் - மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இசை அமைத்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க பேண்டசி படமாக உருவாகியுள்ள இந்தப்படம் மே-17 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் அறிவித்தபடி 'தும்பா' படம் மே 17 அன்று வெளியாகவில்லை! காரணம்... தும்பாவின் தமிழகவிநியோக உரிமையை வாங்கிய 'கோட்டபடி' ராஜேஷ், மிஸ்டர் லோக்கல் படம் வெளியாவதால் தும்பா படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்காது என்ற காரணத்தைச் சொல்லி முட்டுக்கட்டை போட்டுவிட்டாராம். இதனால் தள்ளிப்போன 'தும்பா'வுக்கு அடுத்தடுத்த வாரங்களில் போதிய தியேட்டர்கள் கிடைக்கவிலை. புதிய ரிலீஸ் தேதி கிடைக்காமல் திண்டாடி கடைசியாக ஜூன் 21-ஆம் தேதி தும்பா படம் வெளியாகும் என்ற அதிகார்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.