Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஆமீர்கானின் தமிழ்ப் பாசம்

22 மே, 2019 - 10:24 IST
எழுத்தின் அளவு:
Aamirkhans-Tamil-Paasam

ஹிந்தி நடிகர்கள் பலருக்கும் தமிழ் மீதும் தமிழ்ப் படங்கள் மீதும் ஆர்வம் உண்டு. சமீப காலங்களில் தமிழ்ப்படங்கள் ஹிந்தியில் ரீமேக் ஆவதும் கொஞ்சம் கூடுதலாகி வருகிறது. ஒரு காலத்தில் ஹிந்திப் படங்களின் படப்பிடிப்புகள் கூட தமிழ்நாட்டில் அதிகமாக நடந்ததும் உண்டு. ஹிந்தி நடிகர்கள் தமிழ்ப் படங்களில் அதிகம் நடிக்கவில்லை என்றாலும் அவர்களது படங்களில் தமிழ் ஒளிப்பதிவாளர்களைத்தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள்.

பாலிவுட்டின் டாப் நடிகரான ஆமீர் கான் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்கப் போகிறாரா எனத் தெரியவில்லை. திடீரென அவருடைய டுவிட்டரில் அம்மா, அப்பா எனப் பதிவிட்டு ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். அவருடைய அம்மாவின் 75வது பிறந்த நாளை இரண்டு நாட்களுக்கு முன்பு கொண்டாடியிருக்கிறார்.

அதற்கான டுவிட்டர் பதிவில் அவருடைய அம்மாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் 'அம்மா' என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்தியிருக்கிறார். அடுத்து அவருடைய குடும்பத்தினர் பற்றிய பதிவில் கூட அம்மா, அப்பா என்றும், அவருடைய உறவினர்களுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு எங்களது நெருங்கிய, அன்பான எல்லா அம்மாக்களும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஹிந்தியில் அம்மாவை 'மா' அல்லது 'மாதாஜி' என்றும், அப்பாவை 'பிதாஜி' என்றுதான் வழக்கமாக அழைப்பார்கள். அப்படியிருக்கையில் ஆமீர்கான் 'அப்பா, அம்மா' எனக் குறிப்பிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆமீர்கானின் தமிழ் ரசிகர்களும் அதுகுறித்து அவரது கமெண்ட்டில் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மட்டமான டுவீட் : மன்னிப்பு கேட்ட விவேக் ஓபராய்மட்டமான டுவீட் : மன்னிப்பு கேட்ட ... விவேக் ஓபராய் டுவீட், சல்மான் என்ன சொல்கிறார் ? விவேக் ஓபராய் டுவீட், சல்மான் என்ன ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Amal Anandan - chennai,இந்தியா
28 மே, 2019 - 01:01 Report Abuse
Amal Anandan அவருடைய இரண்டாவது மனைவி சென்னையை சேர்ந்தவர் ஆதலால் அவர் அடிக்கடி சென்னை வருவதுண்டு. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் கிளப்பில் இறகுப்பந்து விளையாட வருவதுண்டு.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23 மே, 2019 - 03:48 Report Abuse
J.V. Iyer பல மொழிகளில் தாய் தந்தையர்களுக்கு அம்மா அப்பா என்று தான் கூறுவார்கள். கொரியா மொழியிலும் அப்படித்தான். அமீர் கான் கொரியா திரைப்படங்கள் அதிகம் பார்ப்பார்போல.
Rate this:
VSK - CARY,யூ.எஸ்.ஏ
22 மே, 2019 - 15:47 Report Abuse
VSK
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in