விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்! | 'அடடே சுந்தரா' டிரைலர் மே 30ல் வெளியீடு | ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர் | வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் | குறும்படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி | வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி | என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி | 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி | புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு |
விஜய் இயக்கத்தில், பிரபுதேவா, தமன்னா, நந்திதா, கோவை சரளா மற்றும் பலர் நடித்துள்ள 'தேவி 2' படம் வரும் 31ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை 'அபிநேத்ரி 2' என்ற பெயரில் தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள்.
தெலுங்கு ரசிகர்களைக் கவர்வதற்காக இன்று 'ரெடி ரெடி' என்ற ஒரு வீடியோ பாடலை வெளியிட்டுள்ளார்கள். அதில் தமன்னா மிகவும் கிளாமராக நடித்திருக்கிறார். ஒரு காட்சியில் குட்டையான டிரவுசர் ஒன்றை கோவை சரளா தமன்னாவுக்குத் தருகிறார். ஆனால், அதை அவர் போட மறுக்கிறார். டிரவுசரைப் போடுகிறாயா அல்லது இந்த கர்சீப்பைப் போடுகிறாய என கோவை சரளா கேட்பது போல அந்தக் காட்சியை வேறு அமைத்திருக்கிறார்கள். மேலும், இந்தப் பாடல் காட்சியில் பிரபுதேவாவுடன் தமன்னா மிகவும் நெருங்கி நடித்துள்ளார்.
தமிழில் இந்த வீடியோ பாடலை வெளியிட்ட போது கூட யாரும் அதிகம் கவனிக்கவில்லை. ஆனால், தெலுங்கில் வெளியானதும் தமன்னா இப்படி நடித்திருக்கிறாரே என விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.