திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா | 'கைதி' வரவேற்பு : ஹிந்தி ரீமேக்கான 'போலா'வுக்குக் கிடைக்குமா? | ஹிந்தியில் இருந்து தமிழுக்கு வந்த 'பிசாசினி' | மகேஷ் பாபு நடிக்கும் படம் : டைட்டிலுக்கு முன்பே ரிலீஸ் தேதி அறிவிப்பு | 2 நாயகிகள் அறிமுகமாகும் அங்காரகன் | 31ம் தேதி தமிழில் வெளியாகும் ஹாலிவுட் படம் | 8 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய திரையில் ஷெரின் |
இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தை வடிவேலு நடிப்பில், ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ்க்காக இயக்கினார் சிம்புதேவன். ஆனால் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட சில தினங்களிலேயே அவரும், வடிவேலுவும் முட்டிக்கொண்டனர். இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு தயாரிப்பாளர் சங்கம் வரை பஞ்சாய்த்து நடந்தது. ஆனபோதும் எந்த முன்னேற்றமும் இல்லை.
இதனால் இந்த படத்தை நம்பி காலத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்த சிம்புதேவன், வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்க தயாரானார். இப்படத்திற்கு கசட தபற என பெயரிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதனை நடிகர் சூர்யா வெளியிட்டார்.
மேலும் இப்படத்தில் 6 எடிட்டர்கள் பணிபுரிய உள்ளனர். இவர்களை எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் இன்று மாலை அறிமுகம் செய்து வைக்கிறார்.