விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்! | 'அடடே சுந்தரா' டிரைலர் மே 30ல் வெளியீடு | ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர் | வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் | குறும்படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி | வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி | என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி | 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி | புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு |
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வருகிறார் யோகிபாபு. இவரது கால்சீட்டுக்காக முன்னணி நடிகர்களின் படங்களே வெயிட் பண்ணிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது 18 படங்களில் நடித்து வருகிறார் யோகிபாபு.
அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நடித்த யோகிபாபு, தற்போது ரஜினியின் தர்பார், விஜய்யின் 63வது படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படங்களில் நடித்தபோது தான் எமன் வேடத்தில் நடித்து வரும் தர்மபிரபு படத்தின் டிரைலரை அவர்களிடம் காண்பித்திருக்கிறார்.
அப்போது ரஜினி யோகிபாபுவின் காமெடியைப்பார்த்தபோது, ஒரு காட்சியில் யோகிபாபு வரும்போது இமயத்தின் உயரமே என்று அவரைப்பார்த்து ஒருவர் சொல்வார். அதற்கு ஏய் என் உயரமே 5.5 தான்டா என்று யோகிபாபு சொல்வார். இதை ரஜினி ரொம்பவே ரசித்தாராம். அதேபோல் விஜய்யும் 63வது படத்தில் நடித்து வந்தபோது தர்மபிரபு படத்தின் டிரைலரை பார்த்த விழுந்து விழுந்து சிரித்ததாக சொல்கிறார் யோகிபாபு.