துல்கரின் சீதாராமம் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த ஜன கன மன | பஹத் பாசில் தயாரிப்பில் நடிக்கும் தங்கல் நடிகர் | ரிட்டர்ன் டிக்கெட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தலைமறைவு நடிகர் | இன்று 85வது பிறந்தநாள் : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ‛ஆச்சி' மனோரமா | சில்க் ஸ்மிதாவுக்கு சமர்ப்பணம் செய்த காஜல் பசுபதி | உன் குறிக்கோள் சரியாக இருந்தால் ஒவ்வொரு அடியும் உனக்கானது : கேப்ரில்லா செல்லஸ் | விதவிதமான புடவைகளில் அழகாக போஸ் கொடுத்த கண்மணி மனோகரன்! | ஆல்யாவை போல போஸ் கொடுத்த அய்லா | உங்களில் யார் அடுத்த ஸ்டார் : ஜீ தமிழ் நடத்தும் மெகா ஆடிசன் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய திரையுலகில் உள்ள சில முன்னணி நடிகைகள் அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களைப் பதிவிடுவது வாடிக்கையாகிவிட்டது.
அப்படி அவர்கள் பதிவிடும் புகைப்படங்கள் சமயங்களில் கிளாமர் என்பதைத் தாண்டி ஆபாசமாக இருப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது. இதனால் சில சர்ச்சைகளும் எழுந்து அதற்கு 'எங்கள் விருப்பப்படி ஆடை அணிகிறோம்,' என சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிப்பதும் நடந்து வருகிறது.
சமீபத்தில் கூட 'பேட்ட' நடிகை மாளவிகா மோகனன் இப்படிப்பட்ட சர்ச்சையில் சிக்கினார். இப்போது நடிகை காஜல் அகர்வால் கிளாமரான புகைப்படங்கள் சிலவற்றை அவருடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். காஜல் அகர்வால் கூட இப்படி புகைப்படங்களைப் பதிவிடுகிறாரே என ஆச்சரியத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.