Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காவி வேஷ்டி மீது விஜய் தந்தை காட்டம்

21 மே, 2019 - 13:29 IST
எழுத்தின் அளவு:
SA-Chandrasekar-slams-indirectly-BJP-and-Saffron

பா.ஜ., மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்பு வெளியாகி உள்ள நிலையில் இனிமே எல்லோரும் காவி வேஷ்டி கட்டிக் கொண்டு தான் அலைய வேண்டும் என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சினிமா விழாவில் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். ஏராளமான வெற்றி படங்களை இயக்கி உள்ளார். இவரது படங்களில் சமூகம் சார்ந்த பிரச்னைகள் பெரிதாக பேசப்படும். இந்நிலையில், "காப்பாத்துங்க நாளைய சினிமாவை" என்ற குறும்பட வெளியீட்டு விழாவில் சந்திரசேகர் பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது :

சினிமாவிலும், அரசியலிலும் 90 சதவீதம் திருடர்கள் தான் இருக்கிறார்கள். ஏனென்றால் இன்றைக்கு யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி, சினிமாவை காப்பாற்ற நினைப்பது இல்லை. சினிமாவையும், சினிமாக்காரனையும் எப்படி அழிக்கலாம் என நினைக்கிறார்கள். எங்கே அவர்களை வளர்த்துவிட்டால் அவர்கள் ஆட்சியை பிடித்துவிடுவார்கள் என்ற பயம் அவர்களுக்கு வந்துவிடுகிறது. தமிழ் ராக்கர்ஸ் போன்றவர்களுக்கு அரசியல்வாதிகள் தான் ஏஜென்ட்டாக இருப்பார்களோ என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. எம்ஜிஆருக்கு இருந்த சினிமா உணர்வு இன்றைக்கு எந்த அரசியல்வாதிகளுக்கும் கிடையாது.

நேற்றைய கருத்து கணிப்பு நிலவரங்களை பார்க்கும் போது, மக்கள் மீண்டும் தவறு செய்துவிட்டார்களோ என எண்ண தோன்றுகிறது. தமிழகம் தவிர்த்து ஓரிரு மாநிலங்கள் தப்பித்துவிட்டன. இனி நாம் அனைவரும் காவி வேஷ்டி கட்டிக்கொண்டு தான் திரிய போகிறோம் என பா.ஜ.வை மறைமுகமாக விமர்சித்தார். மக்கள் பணத்துக்கு விலை போய்விட்டனர். இந்த தேர்தலில் பணம் விளையாடி இருக்கிறது என்றார்.

மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போதெல்லாம் நான் எந்த கட்சியையும் குறிப்பிடவில்லை என்றார்.

எஸ்.ஏ.சந்திரசேகரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. காவி வேஷ்டி என்ன அவ்வளவு கேவலமா, ஏன் அதை அணியக்கூடாதா என சமூகவலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். மேலும் பா.ஜ.வை மறைமுகமாக தாக்கி பேசியிருப்பதால் பா.ஜ.,வினரும் விமர்சித்து வருகின்றனர்.

விஜய்யின் மெர்சல் படம் வெளியான சமயத்தில் அந்தப்படத்திற்கு பா.ஜ.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (114) கருத்தைப் பதிவு செய்ய
நாயகனாக அறிமுகமாகும் டிஸ்கோ சாந்தி மகன்நாயகனாக அறிமுகமாகும் டிஸ்கோ சாந்தி ... ஆர்ஆர்ஆர் - 'ரகுபதி ராகவ ராஜாராம்' தான் தலைப்பு, விரைவில் அறிவிப்பு ? ஆர்ஆர்ஆர் - 'ரகுபதி ராகவ ராஜாராம்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (114)

arabuthamilan - Manama,பஹ்ரைன்
04 ஜூலை, 2019 - 11:07 Report Abuse
arabuthamilan உண்மையைத்தான் உரக்க சொல்லியிருக்கிறார் சந்திர சேகர். அதற்கு ஏண் இத்தனை பேரும் வரிந்து கட்டிக்கொண்டு வாறீங்க. அவனவனுக்கு பேசவுரிமை இருக்கிறது,
Rate this:
V Mohan - London,யுனைடெட் கிங்டம்
24 மே, 2019 - 11:21 Report Abuse
V Mohan We tamilnadu hindus don't have any guys. Look at out respect silly cinema idiots split on our face. Where they get this guys to speak against Hindus. You converted piece of flith, you don't have any right to degrade us. You and your son Joseph Vijay are today coz of the change Hindus throw for you flith
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
24 மே, 2019 - 01:49 Report Abuse
Aarkay எங்கப்பா பொங்கியவனே இருக்கியா? இப்போ என்ன சொல்றே? சாத்தியமா ஜோசப்போட அடுத்த படம் ஊ ஊ தான்.
Rate this:
S.kausalya - Chennai,இந்தியா
23 மே, 2019 - 16:03 Report Abuse
S.kausalya அப்ப ஏன் வேளாங்கண்ணிக்கு போகும்போது காவி நிறத்தில் வேட்டி கட்டிகிட்டு உங்க ஆட்கள் போறாங்க? யாரை ஏமாத்த.? வேற மதம் போனால் அப்படியே போய் விட வேண்டும். போய் விட்டு இங்கு நடப்பதை பற்றி ஏன் விமர்சனம்?
Rate this:
s t rajan - chennai,இந்தியா
23 மே, 2019 - 02:23 Report Abuse
s t rajan நீ தான் க்ருத்துவத்திறகு விலையாகி விட்டாயே - அப்புறம் ஏன் இன்னும் சந்திரசேகரன்னு ஊரை ஏமாத்திகிட்டு அலையறே ? உன் தற்போதைய பேரை வச்சு தொழில் செய்ய வேண்டியது தானே ? உன் பையனும் சோசப்பு ன்னு கூறிக் கொள்ள வேண்டியது தானே ? எல்லாத்துககும் மேல உங்க வீட்டு சோபா அம்மா கண்ணனுயும் கந்தனையும் பாடி ஏமாத்திகிட்டு இருக்கறதை நிறுத்துங்கய்யா. குடும்பமே இந்துக்களை அவங்க போடற டிக்கட் துட்டுல தானே வாழுது. எங்கே இந்து ரசிகர்கள் என் சோசப்பு படத்தை ஆதரிக்க வேண்டாமுன்னு சொல்லு பார்க்கலாம், தைரியமிருந்தா ?
Rate this:
மேலும் 109 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in