Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நிஜ வாழ்க்கையிலும் நான் ஜிப்ஸியே : ஜீவா

21 மே, 2019 - 10:51 IST
எழுத்தின் அளவு:
I-am-Gypsy-in-real-life-also-says-Jeeva

ஒலிம்பியா மூவீஸ் சார்பில் அம்பேத் குமார் தயாரித்துள்ள படம் ஜிப்ஸி. குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கி உள்ளார். ஜீவா, நடாஷா சிங், லால் ஜோஸ், சன்னி வாயன், சுசீலா ராமன் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் ஜீவா பேசியதாவது:

ஜிப்ஸி எனக்கு ஒரு பெரிய பயணம். என் வீட்டிலே நான் ஜிப்ஸி போல தான். அப்பா ராஜஸ்தானி, அம்மா தமிழ்நாடு, என் மனைவி பஞ்சாபி இப்படி எங்க வீட்டுக்குள்ளே பல கலச்சாரம் இருக்கிறது. அந்த வகையில் நானும் ஜிப்ஸி தான். இந்தப் படத்திற்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை நான்கு மாதங்கள் பயணம் செய்திருக்கிறேன். எல்லா இடத்திலும் மனிதர்கள் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள். இசையை ரசிக்கிறவர்களாக கவிதையை நேசிக்கிறவர்களாக மனிதர்களை நேசிக்கிறவர்களாக இருக்கிறார்கள்.

இந்தமாதிரி ஒரு படம் கிடைத்ததும் மிகப்பெரிய மகிழ்ச்சி. ஜிப்ஸி ரசிகனை முன்மொழிபவன். இந்தப்படத்தில் ராஜுமுருகன் எனக்கு நல்ல தீனி கொடுத்து இருக்கிறார். ஒரு நடிகன் நல்ல பெயர் வாங்குறான்னா அதற்கு காரணம் இயக்குநரின் எழுத்து தான். ராம், கற்றது தமிழ் படங்கள் எப்படி எமோஷனை வெளிப்படுத்தியதோ ஜிப்ஸி அதைவிட அதிகமாக எமோஷனை வெளிப்படுத்தும் என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சசிகுமாரின் ராஜவம்சம் : நிக்கி கல்ராணி ஹீரோயின்சசிகுமாரின் ராஜவம்சம் : நிக்கி ... விக்ரமின் 58வது படம் : அதிகாரபூர்வ அறிவிப்பு விக்ரமின் 58வது படம் : அதிகாரபூர்வ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in