‛ரைட்டர் பத்மபூஷன்' படம் பாருங்கள் ; சிபாரிசு செய்யும் மகேஷ்பாபு | பதான் இயக்குனருடன் சேர்ந்து பிரபாஸ் - ஹிருத்திக் படத்தை புதுப்பிக்கும் புஷ்பா தயாரிப்பாளர்கள் | தரக்குறைவாக விமர்சித்த நெட்டிசன்களுக்கு வீஜே மகேஸ்வரி பதிலடி | படிப்பை விற்காதீர்கள்: தனுஷ் | மீண்டும் ஒரு ‛லக்கி மேன்' : ஹீரோவாக யோகி பாபு | பணிவாக இருங்கள், பெற்றோருக்கு முக்கியத்துவம் கொடுங்க : மாணவர்களுக்கு நயன்தாரா அட்வைஸ் | 'உன்னோட நடந்தா' பாடல் அனுபவத்தைக் கூறும் சுகா | அமெரிக்க வசூல் - இரண்டாம் இடத்தைப் பிடித்த 'பதான்' | ரஜினி படங்கள், கின்னஸ் சாதனை படத்தை எடுத்த தயாரிப்பாளர் காலமானார் | பிப்ரவரி 18ல் சிம்புவின் ‛பத்து தல' படத்தின் இசை விழா |
செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டிடி.ராஜா தயாரிக்கும் படம் ராஜவம்சம். சுந்தர்.சி உதவியாளர் கதிர்வேலு இயக்குகிறார். கதாநாயகனாக சசிகுமார் நடிக்க, ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். ராஜவம்சம் சசிகுமாரின் 19 வது படம். சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார்.
இவர்களுடன் ராதா ரவி, தம்பி ராமைய்யா, விஜய குமார், சதிஷ், மனோபாலா, ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி, யோகி பாபு, கும்கி அஸ்வின், ஆடம்ஸ், சரவணா சக்தி, நமோ நாராயணன் என 49 பேர் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் கதிர்வேலு கூறியதாவது:
இது குடும்ப படமாக மட்டுமில்லாமல் தற்போது நாட்டிற்கு தேவையான ஒரு கருத்தும் இப்படத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த உலகத்தில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒன்றை மறந்து ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒரு நிமிடம் நின்று மறந்ததை நினைவூட்டும் படமாக இது இருக்கும். படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, பேங்காக் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது என்றார்.