Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷ் நடித்த ஆங்கில படம் தமிழில் வெளியாகிறது

21 மே, 2019 - 10:40 IST
எழுத்தின் அளவு:
Dhanushs-English-movie-releasing-in-Tamil

நடிகர் தனுஷ் நடித்த ஆங்கிலப்படம், "தி எக்ஸ்டாடினரி ஜர்னி ஆப் தி பக்கிர்". ஆங்கிலம், பிரஞ்சு மொழியில் தயாரான இந்தப்படத்தை கென் ஸ்காட் இயக்கி இருந்தார். தனுஷ் உடன் பெர்னிக் போஜோ, எரின் மானிட்டரி, பர்கத் அப்டி உள்பட பலர் நடித்திருந்தார்கள், வின்செண்ட் மத்தியாஸ் ஒளிப்பதிவு செய்திருந்தார், நிக்கோலஸ் எரரா, அமித் திரிவேதி இசை அமைத்திருந்தனர். கடந்த ஆண்டு மே மாதம் வெளியானது.

மும்பை குடிசைப் பகுதியைச் சேர்ந்த பக்ரி, ஒரு மேஜிக் நிபுணர். சின்ன சின்ன மேஜிக் செய்து எல்லோரையும் கவரக்கூடியவர். ஒரு நாள் அவன் தாய் அவனது தந்தை வெளிநாட்டில் இருப்பதாக கூறிவிட்டு தாய் இறந்து விட... பக்ரி தன் தந்தையை தேடி பாரீஸ், இங்கிலாந்து என சுற்றுகிற கதை. அவனது இந்த பயணத்தின் அவன் சந்திக்கிற நபர்கள், அவனுக்கு வரும் காதல் என ஜாலியாக, காமெடியாக செல்லும் படம்.

இந்தப்படம் தற்போது பக்கிரி என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. மதன் கார்க்கி தமிழ் வசனம், மற்றும் பாடல்களை எழுதி உள்ளார். ஒய்ட் நாட் எக்ஸ் நிறுவனம் ஜூன் மாதம் 21ந் தேதி வெளியிடுகிறது.

இதுகுறித்து தனுஷ் கூறியிருப்பதாவது: “எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பகீர் இந்தியாவிற்கு வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இது என்னை கடினமாக உழைக்கவும், வித்தியாசமான முயற்சிகளில் இறங்கவும் ஊக்குவிக்கும் என்பதை எனது ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி என்றார்.

படத்தை வெளியிடும் சஷிகாந்த் கூறியிருப்பதாவது: இந்த படத்தை தமிழக ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். பல்வேறு சர்வதேச அங்கீகாரங்களை பெற்ற இத்திரைப்படம், சினிமா ரசிகர்களுக்கும், தனுஷின் ரசிகர்களுக்கும் ஒரு விருந்தாக அமையும் என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
14 வருடங்களுக்குப்பிறகு சிம்பு எடுக்கும் முயற்சி14 வருடங்களுக்குப்பிறகு சிம்பு ... குடும்ப படங்கள் தராத குற்ற உணர்வில் தவிக்கிறேன் : எஸ்.ஜே.சூர்யா குடும்ப படங்கள் தராத குற்ற உணர்வில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

skv - Bangalore,இந்தியா
21 மே, 2019 - 12:23 Report Abuse
skv<srinivasankrishnaveni> கிரேட் தனுஷ் இது உமக்குக்கிடைத்த ஸ்பெஷல் சான்ஸ் நன்னா யூஸ் பண்ணிருக்கீங்க நீ எண்பெறன்போல என்பதால் உன்னை எனக்கு ரொம்பப்பிடிக்கும் உனக்கு ஆங்கிலம் தெரியுமா உன் படிப்பு எவ்ளோ என்பது ஒன்னும் தெரியாது நீ நடிச்ச வேலைஇல்லாத பட்டதாரி என்னும் படம் பார்த்திருக்கேன் எனக்கு ரொம்பவே பிடிச்சது நல்ல திறமை அண்ட் முயற்சி இருக்கு அதேபோல உன் முன் சிலப்படங்களும் ரசித்துருக்கேன் முதுமையால் நியாபகம் இல்லேப்பா வாழ்த்துக்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in