Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுசிலாவை சரஸ்வதியை போல் உணர்கிறேன் : ஏசுதாஸ்

20 மே, 2019 - 13:21 IST
எழுத்தின் அளவு:
yesudas-praise-susheela

லயா மீடியா சார்பில் சுசீலா 65 என்ற நிகழ்ச்சி மே 19 அன்று மாலை சென்னை நூற்றாண்டு விழா கட்டிடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் யுகே முரளியின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் சிறப்பு விருந்தினராக சங்கர் கணேஷ் வந்தார். அவரைத் தொடர்ந்து ஏசுதாஸ், பாக்யராஜ், வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, கௌதமி, சுகாசினி, பூர்ணிமா ஆகியோர் கலந்து கொண்டனர். பாடகர்களில் வேல்முருகன், மாலதி ,சின்ன பொண்ணு, சுஜாதா, கங்கை அமரன், சந்தான பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர் .

இவ்விழா தொடங்கி சிறிது நேரத்தில் இளையராஜா வந்தார். நேரே மேடைக்குச் சென்று சுசிலாவை பற்றியும், அவரது பாடல்கள் பற்றியும் பேசினார். அப்போது அவர், சுசிலாவின் இவ்வளவு பாடல்கள் பெரிய அளவுக்கு பேசப்பட்டது என்றால் கவிஞர் கண்ணதாசன் தான் முக்கிய காரணம் என்று அவரைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசினார். இளையராஜாவை தொடர்ந்து, நிகழ்ச்சியின் ஹைலைட்டாக ஏசுதாஸ் பேசும்போது, பாடகி சுசீலாவை சரஸ்வதி போல உணர்கிறேன் . ஆரம்ப காலகட்டத்தில் அவரது பாடல்களில் பல பாடல்களுக்கு ரசிகராக இருந்து இருக்கிறேன் என்றார். இதைக் கேட்டதும் கீழே அமர்ந்திருந்த சுசிலா, ஏசுதாஸ் எப்போது எனக்கு போன் செய்தாலும் விழியே கதை எழுது என்று தான் கூப்பிடுவார் என்றார்.


தெலுங்கு மொழி பேசுபவராக இருந்தாலும் சுசிலாவின் ழ, ள உச்சரிப்பு மிக துல்லியமாக இருக்கும் என புகழ்ந்தார் ஏசுதாஸ். தமிழ் வார்த்தைகளை உச்சரிக்கும் போது தெளிவாக உச்சரிப்பார் என்றார். அதற்கு பதிலளித்த சுசிலா, இதுதான் என் பலம் என்றார். விழாவில் ஏசுதாஸ், விழியே கதை எழுது பாடலை அல்கா என்ற சிறுமியுடன் பாடியது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அஜித்திடம் கதை சொல்லி ஓகே வாங்கிய வினோத்அஜித்திடம் கதை சொல்லி ஓகே வாங்கிய ... வெங்கட்பிரபுவின் மூன்றாவது பட அறிவிப்பை சூர்யா வெளியிடுகிறார் வெங்கட்பிரபுவின் மூன்றாவது பட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

21 மே, 2019 - 00:58 Report Abuse
ருத்ரா பின்னணி பாடும் சுசிலா அவர்கள் பாட்டு என்றால் அன்றய முன்னணி நடிகைகள் முகங்கள் நினைவிற்கு வருவதையும், திரு Msv முதல் Kv மகாதேவன் வரை அத்தனை இசை அமைப்பாளர்கள் வரை உடன் பாடியTms முதல் Spbவரை அத்தனை பேரையும் சேர்த்து நம்மை வசப் படுத்திய தேன் குரல்,ஸரஸ்வதியின் திருவருளே. பாராட்டுக்கள் சுசிலாம்மா.
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
20 மே, 2019 - 16:02 Report Abuse
Vasudevan Srinivasan ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்பம்சம் திருமதி. சுசீலா அவர்களின் குரல் இனிமை என்றும் நம்மை மெய்மறக்கச்செய்யும் பழைய படங்களை பார்க்கும்பொழுது பெரும்பாலும் பின்னணி பாடல்கள் டிஎம்எஸ், பி. சுசீலா என்றுதான் வரும். சொல்லக்கூடாது இருந்தாலும் மனதில் ஒரு வருத்தம் இன்றும் சிலர் பாடுகிறார்களே கர்ணகொடூர குரலில்.. இந்த தருணத்தில் சுசீலா மேடம் அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in