Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித்திடம் கதை சொல்லி ஓகே வாங்கிய வினோத்

20 மே, 2019 - 12:50 IST
எழுத்தின் அளவு:
Ajith-to-team-up-with-director-Vinoth

'விஸ்வாசம்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு 'நேர் கொண்ட பார்வை' படத்தில் நடித்து முடித்திருக்கிறார் அஜித். 'சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கி வரும் படம்தான் 'நேர் கொண்ட பார்வை'. ஹிந்தியில் வெளிவந்த 'பின்க்' படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். முதலில் ரீமேக் படத்தை இயக்க வினோத் மறுத்துள்ளார். ஆனால், அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் சேர்த்தே நீங்கள் இயக்கலாம் என தயாரிப்பு நிறுவனமும், அஜித்தும் உறுதியளித்ததை அடுத்தே இந்தப் படத்தை இயக்க சம்மதித்தார் வினோத்.

'நேர் கொண்ட பார்வை' படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. அடுத்த மாதம் அந்த வேலைகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், அஜித் நடிக்கும் அடுத்த படத்திற்கான கதையை வினோத் எழுதி முடித்து அதை அஜித்திடம் சொன்னாராம். அஜித்திற்கும் கதை பிடித்து ஓகே சொல்லிவிட்டதாகத் தகவல். விரைவில் இந்தப் படத்திற்கான அறிவிப்பை வெளியிடயும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.


இதனிடையே இந்த புதிய படத்திற்கு யாரை இசையமைப்பாளராக நியமிக்கலாம் என்பதில் கடும் விவாதம் நடந்து வருகிறதாம். தயாரிப்பாளர் தரப்பில் ஏஆர் ரகுமான் பேச்சு அடிபடுவதாகத் தகவல். அப்படி நடந்தால் 'வரலாறு' படத்திற்குப் பிறகு அஜித் - ரகுமான் மீண்டும் இணையும் படமாக அது இருக்கும்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
இலங்கை தமிழர்கள் வாழ்க்கையை பின்னணியாக கொண்ட சினம் கொள்இலங்கை தமிழர்கள் வாழ்க்கையை ... சுசிலாவை சரஸ்வதியை போல் உணர்கிறேன் : ஏசுதாஸ் சுசிலாவை சரஸ்வதியை போல் உணர்கிறேன் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Mani -  ( Posted via: Dinamalar Android App )
21 மே, 2019 - 04:17 Report Abuse
Mani I dont think that Ajith is fit for this character. Lets see...
Rate this:
Venkat -  ( Posted via: Dinamalar Android App )
20 மே, 2019 - 16:32 Report Abuse
Venkat ARR should be good... wanted to see the reunion almost after 14 years
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in