மறக்க முடியுமா? - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை? | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா? | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |
தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் தோன்றியவர் கேப்ரெல்லா. அவர் நயன் தாரா நடிப்பில் உருவான ஐரா படத்திலும் நடித்திருந்தார். அவர் அதைத் தொடர்ந்து குறும்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வருகிறார். ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பும் வந்து கொண்டிருக்கிறது. கறுப்பழகி என்று கேப்ரெல்லாவை, சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர்.
இந்நிலையில், அவர் தன்னுடைய நீண்ட கால காதலனான சினிமா ஒளிப்பதிவாளர் ஆகாஷ் என்பவரை கரம் பிடிக்க, நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டிருக்கிறார்.
இது குறித்து நடிகை கேப்ரெல்லா கூறியிருப்பதாவது:
ஒரே தொழிலில் இருந்து, ஒத்த எண்ணம் கொண்ட இருவரால்தான் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில், நான் நடிகை என்றால், அவர் சினிமா ஒளிப்பதிவாளர். என்னுடைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவர் விரும்பிப் பார்ப்பார். நல்லது; கெட்டது என எல்லாவற்றையும் ஒளிவு மறைவின்றி என்னிடம் சொல்வார். அக்கறை இருந்தால் மட்டுமே, எதையும் ஒளிக்காமல் சொல்ல முடியும். அந்த வகையில் அவருடைய அணுகுமுறை எனக்குப் பிடித்திருந்தது. இருவரும் காதலை பரிமாறினோம்.
வீட்டுக்குச் சொல்ல வேண்டுமே... நானே, அவருடைய அப்பாவுக்கு போன் செய்து, ஆகாஷ் மீதான எனது காதலையும்; என் மீதான அவர் காதலையும் சொன்னேன். சும்மா விளையாடாதே என்று சொன்ன ஆகாஷின் அப்பா, குடும்பத்தினருடன் பேசி விட்டு வந்து, என்னுடைய காதலை அங்கீகரிப்பதாகச் சொன்னார். அதையெடுத்தே, திருமண ஏற்பாட்டில் இறங்கினோம். நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. ஜனவரியில திருமணம். ஆகாஷ் எனக்கு கிடைச்சதுல நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.