Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'மகாமுனி' ஆர்யாவைப் பாராட்டிய மனைவி, மாமியார்

18 மே, 2019 - 15:05 IST
எழுத்தின் அளவு:
Arya-got-wishes-from-wife-and-mother-in-law

தமிழ் சினிமாவில் 'நான் கடவுள்' படத்திற்குப் பிறகு நல்ல நம்பிக்கையைக் கொடுத்த நடிகராக மாறியவர் ஆர்யா. 'பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி' படங்களுக்குப் பிறகு அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இருந்தாலும் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

எதிர்பார்க்கப்பட்ட 'கடம்பன், கஜினிகாந்த்' படங்களும் ஏமாற்றின. ஆர்யா நடித்து அடுத்து வெளிவர உள்ள படம் 'காப்பான்'. இந்தப் படத்தின் நாயகன் சூர்யாதான் என்றாலும் ஆர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இருப்பினும் தனி நாயகனாக அவர் நடித்து அடுத்து வெளிவர உள்ள படம் 'மகாமுனி'.

'மௌனகுரு' படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. டீசரைப் பார்த்து ஆர்யாவின் மனைவி சாயிஷா கணவரைப் பாராட்டியுள்ளார்.

“ஒரு கடுமையான, புத்துணர்வான தோற்றம் கணவரே. 'மகாமுனி' பார்க்க காத்திருக்க முடியவில்லை,” என்று கூறியுள்ளார். ஆர்யாவின் மனைவி மட்டுமல்ல மாமியாரும் பாராட்டியுள்ளார். “நான் பார்க்கக் காத்திருக்கும் அற்புதமான நடிப்பு. அவருடைய மகத்தான கடும் உழைப்பைப் பார்த்திருக்கிறேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜூன் 21ல் தும்பா ரிலீஸ்ஜூன் 21ல் தும்பா ரிலீஸ் பகைவனுக்கு அருள்வாய் - படமாகிறது ஷேக்ஸ்பியர் நாடகம் பகைவனுக்கு அருள்வாய் - படமாகிறது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in