வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு | ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் | அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர் | ஓடிடியில் வெளியானாலும் 50 நாட்களைக் கடந்தும் ஓடும் 'ஜெயிலர்' |
கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள 'பிக் பாஸ் 3' நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் யார் யார் என்ற தகவல் அடிக்கடி வெளியாகி வருகிறது. அவற்றில் சில உண்மையில்லாத தகவல்களாகவும் இருக்கின்றன.
இதற்கு முன்னர், சாந்தினி, லைலா, பிரேம்ஜி, ராதாரவி உள்ளிட்ட சிலர் கலந்து கொள்ளப் போவதாகச் செய்திகள் வெளிவந்தன. ஆனால், அவர்கள் அதை மறுத்தனர். பின்னர் நடிகை சாக்ஷி அகர்வால், சுதா சந்திரன் ஆகியோர் கலந்து கொள்வதாக வந்த செய்தியை அவர்கள் இன்னும் மறுக்கவில்லை.
இதனிடையே, அடுத்த பட்டியலாக பிரசன்னா, பவர்ஸ்டார், சஞ்சனா சிங், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராஜா ராணி ஆலியா மானசா ஆகியோரிடம் பேசி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
போட்டியாளர்கள் தேர்விலும் ஒரு கணக்கு இருக்கிறது. சினிமாவில் இருந்து சிலர், நகைச்சுவைக்காக சிலர், சர்ச்சைக்காக சிலர், டிவியிலிருந்து சிலர், கிளாமருக்காக சிலர் என ஒரு 'கேட்டகிரி' வைத்துதான் தேர்வு செய்து வருகிறார்கள். கமல்ஹாசனே மூன்றாவது சீசனையும் தொகுத்து வழங்க உள்ளதால் இந்த சீசனுக்கும் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது.