Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டப்பிங் கலைஞர் ரவீணாவிடம் மன்னிப்பு கேட்ட ராசி கண்ணா

17 மே, 2019 - 16:43 IST
எழுத்தின் அளவு:
Raashi-khanna-says-sorry-to-Dubbing-artist-Raveena

ஒரு கிடாயின் கருணை மனு படத்தில் நாயகியாக நடித்தவர் பிரபல டப்பிங் கலைஞர் ரவீணா. அதையடுத்து ராக்கி, காவல்துறை உங்கள் நண்பன் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

வடஇந்தியாவில் இருந்து வரும் பல நடிகைகளுக்கு ரவீணா டப்பிங் கொடுத்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான அயோக்யா படத்திலும் ராசி கண்ணாவிற்கு இவர் தான் டப்பிங் பேசியிருந்தார். ஆனால் படத்தின் டைட்டீல் கார்டில் ரவீணாவின் பெயர் இடம்பெறவில்லை.

அதனால் தனது டுவிட்டரில், அயோக்யாவில் பணியாற்றிய செட் பணியாளர்கள், மெஸ் பணியாளர்கள், பெயிண்டர்கள் என அனைவரது பெயரும் டைட்டீலில் இடம்பெற்றிருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ டப்பிங் கலைஞர்களின் பெயர் மட்டும் இடம் பெறவில்லை. நாங்கள் அடிக்கடி மறக்கப்படுகிறோம், காத்திருக்கிறோம் என்று பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து ரவீணாவின் டுவீட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த நாயகி ராசிகண்ணா, அவரிடத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். அதோடு உங்களது அருமையான குரலை எனக்கு கொடுத்து, என் நடிப்புக்கு சிறப்பு சேர்த்துள்ளீர்கள். உங்களுக்கு நன்றி. சினிமாவில் உங்களுக்கு இன்னும் மிகப்பெரிய பயணம் காத்திருக்கிறது என்று பதில் கொடுத்துள்ளார் ராசிகண்ணா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பயம் பதட்டத்துடன் தமன்னாபயம் பதட்டத்துடன் தமன்னா விஜய் - நயன்தாரா டூயட் விஜய் - நயன்தாரா டூயட்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in