Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரித்திஷ் மனைவி ஜோதி மீது போலீசில் புகார்!

17 மே, 2019 - 16:00 IST
எழுத்தின் அளவு:
Complaint-against-JK-Ritesh-wife

நடிகர் ரித்திஷ் சமீபத்தில் மாரடைப்பால் இறந்து போனார். இதைத் தொடர்ந்து, அவருடைய சொத்துக்கள் சென்னையிலும், வேறு சில இடங்களிலும் இருப்பதையெல்லாம் அவரது மனைவி ஜோதி தேடி கண்டுபிடித்து வருகிறார்.

அப்படித்தான், ரித்திஷிடம் உதவியாளராக இருந்த கேசவன் என்பவரிடமும் ஒரு வீடு இருந்தது தெரியவந்தது. அதையடுத்து, அந்த வீட்டை காலி செய்யச் சொல்லி, கேசவனுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார் ஜோதி. இந்நிலையில், ஜோதி மீது சென்னை பாண்டி பஜார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் கேசவன். அந்தப் புகாரில் அவர் கூறியிருப்பதாவது:

நான் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடிகர் ரித்திஷிடம் இருந்து வந்தேன். அவருக்கு உதவியாளராக இருந்ததால், அவருக்கு சொந்தமான வீடு ஒன்றில் என்னை தங்க வைத்திருந்தார். அந்த வீட்டுக்கு வாடகையாக எதுவும் கொடுக்கவில்லை. அதேப்போல, அவருக்கு உதவியாளராக பணியாற்றிய கால கட்டங்களில் எனக்கு அவர் பணம் எதுவும் கொடுக்கவில்லை.

இந்நிலையில், ரித்திஷ் இறந்து போனதும், வீட்டை விட்டு காலி செய்யச் சொல்லி, ரித்திஷின் மனைவி ஜோதி, என்னை தொடர்பு கொண்டு வீட்டை காலி செய்யச் சொன்னார். அப்படியென்றால், ரித்திஷிடம் நான் பணிபுரிந்ததற்கான பணம் நான்கு லட்ச ரூபாயைக் கொடுங்கள் என்று கேட்டேன். அதற்கு மறுத்து விட்டார். அதனால், நான் வீட்டை காலி செய்யவில்லை. உடனே, அடியாட்களை விட்டு என்னை மிரட்டியவர், ஆபாசமாகவும் என்னிடம் பேசினார்.

தொடர்ந்து, அடியாட்களை வைத்து மிரட்டுகிறார். அதேபோல, இந்த விஷயத்தில் தன்னையும் நுழைத்துக் கொண்டிருக்கும் தொழில் அதிபர் ஐசரி கணேஷ், மரியாதையாக வீட்டை காலி செய்து, ஜோதியிடம் ஒப்படைத்துவிடு; இல்லையென்றால், உனக்கு பெரிய சிக்கல் வரும் என மிரட்டுகிறார். எனவே, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் கேசவன் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரை அடுத்து, பாண்டி பஜார் போலீசார், நடிகர் ரித்திஷின் மனைவி ஜோதியிடம் விசாரித்து வருகின்றனர். அடுத்ததாக, ஐசரி கணேஷிடமும் விசாரிக்க உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மிஸ்டர் லோக்கல் - 8 மணி காட்சிகள் ரத்து ஏன் ?மிஸ்டர் லோக்கல் - 8 மணி காட்சிகள் ... கமலுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அறிவுரை கமலுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

uthappa - san jose,யூ.எஸ்.ஏ
29 மே, 2019 - 06:33 Report Abuse
uthappa அவைங்க வீடு, காலி செய்ய சொன்னா காலி செய்ய வேண்டியதுதான்.நீ சம்பளம் வாங்காம இருந்தது உன் தப்பு.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
29 மே, 2019 - 03:13 Report Abuse
meenakshisundaram ரித்திஷ் இறந்ததால் இவர் அவரது வீட்டை காலி செயது அவரது மனைவிக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பதே சரி. வீட்டை ஓசியில் அனுபவித்த இவர் நான்கு வருஷ வாடகைப்பணத்தை அவரின் மனைவிக்கு கொடுத்து விட்டே பேசலாம். ரித்திஷை எப்படி எல்லாம் டபாய்த்தாரோ?
Rate this:
sam - Bangalore,இந்தியா
28 மே, 2019 - 10:33 Report Abuse
sam He is a fraud and needs to vacate.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in