Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பேய் படத்துக்கு ஆசைப்படும் ஹன்சிகா: கல்யாண்

17 மே, 2019 - 13:48 IST
எழுத்தின் அளவு:
Hansika-got-one-more-Horrow-film

நடிகைகள் நயன்தாரா, த்ரிஷா, ஹன்சிகா என எல்லோருமே பேய் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வமாக இருக்கின்றனர். முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் படங்களை தவிர்த்து, தனி ஹீரோயினாக நடிக்கும் படங்களை தான் அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார் நயன்தாரா. அந்த வழியை ஹன்சிகாவும் பின்பற்றுவது என முடிவெடுத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது குலேபகவாலி படத்தின் இயக்குனர் கல்யாண் இயக்க உள்ள 'ஹாரர்' படத்தில் தனி கதாநாயகியாக நடிக்கிறார் ஹன்சிகா.

ஏற்கனவே, இயக்குனர் சுந்தர் சி இயக்கிய, அரண்மனை படத்தில் பேயாக நடித்திருந்த ஹன்சிகா, இப்போது, ஹரார் படத்திலும் பேயாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஹாரர் படம் குறித்து, அதன் இயக்குநர் கல்யாண் கூறியதாவது:

இப்படம் முழுக்க முழுக்க பேய் சம்பந்தப்பட்டப் படம். ஆனாலும், படத்தில் காமெடி மற்றும் திகில் அனுபவங்கள் நிறைய உள்ளது. கதாநாயகன் இல்லாத தனி கதாநாயகி வேடம் ஹன்சிகாவுக்கு. கதையை அவரிடம் சொன்னதுமே, அவருக்குப் பிடித்துப் போய் விட்டது. உடனே படத்தில் நடிக்கிறேன் என சம்மதம் தெரிவித்து விட்டார். பேயாக நடிப்பதில் தனக்கு ஆர்வம் உண்டு என்றும் அவர் கூறினார்.

அவரோடு படத்தில் நடிக்கும் மற்றவர்களை தேர்வு செய்து வருகிறோம். வரும் ஜூனில் படபிடிப்பு துவங்கும். சென்னை, பெங்களூரு, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில், பேய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சினிமாவை கொல்பவர்கள் யார்? : பட்டியல் போடும் கணேஷ்சினிமாவை கொல்பவர்கள் யார்? : பட்டியல் ... சண்டைக் காட்சிகளுக்குத் தயராகும் த்ரிஷா சண்டைக் காட்சிகளுக்குத் தயராகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in