Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமாவை கொல்பவர்கள் யார்? : பட்டியல் போடும் கணேஷ்

17 மே, 2019 - 13:25 IST
எழுத்தின் அளவு:
Director-Sri-Ganesh-slams-about-todays-cinema

ஏராளமான தமிழ் படங்களில் ஆர்ட் டைரக்டராகப் பணியாற்றியவர் கிருஷ்ணமூர்த்தி. மாநில, மத்திய அரசு விருதுகளை வாங்கிக் குவித்திருக்கும் அவருக்கு, விருதுகள் வந்து சேர்ந்த அளவுக்கு பணம் வந்து சேரவில்லை. அதுதான், இன்றைக்கு அவருக்கான பிரதான பிரச்னையாக இருக்கிறது.

சென்னை, மடிப்பாக்கத்தில் குடியிருக்கும் அவர், வயதான நிலையில் இதய நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைக்கு பணம் இல்லாமல் பெற்ற விருதுகளை விற்று சிகிச்சை செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த செய்தி சமூகவலைதளங்களில் பரவி, பலரையும் இரக்கப்பட வைத்திருக்கிறது. ஆனாலும், அவருக்கு தேவையானவை இன்னும் வந்து சேரவில்லை.

இந்நிலையில், சமீபத்தில், 8 தோட்டாக்கள் படம் இயக்கிய ஸ்ரீ கணேஷ் என்பவர், கிருஷ்ணமூர்த்தியின் நிலை அறிந்து முகநூலில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
அதில் அவரு கூறியிருப்பதாவது:

கிருஷ்ணமூர்த்தின் இன்றைய நிலை குறித்து, ஒரு வீடியோ பதிவை நான் பார்த்தேன். நிலை குலைந்து நின்றேன். கலைஞர்களின் வாழ்க்கை என்னவாக ஆகிறது என நினைத்து, கண்ணீரும், அதே அளவு கோபமும், வீடியோவைப் பார்த்ததும் எனக்கு வந்தது.

எனக்கு தெரிந்ததை வைத்து சொல்கிறேன். சினிமா எப்போதும் மோசமான மனிதர்கள் நிறைந்து கிடக்கும் இடம். ஆனால், கடந்த சில ஆண்டுகளில், தமிழ் சினிமா மிக மோசமான சூழலில் இருக்கிறது. ஏ.வி.எம்., போன்ற நிறைய தயாரிப்பாளர்கள், சினிமா எடுப்பதை விட்டு விலகி சென்றுவிட்டனர்.

உழைப்பையும், முதலீட்டையும் போடுபவர்களுக்கு - பெரும்பாலும் அது திரும்பி வருவதில்லை. அநியாய சம்பளம் வாங்கும் நடிகர்கள், புரோக்கர்கள், பொய் கணக்கு எழுதுபவர்கள்... இவர்கள் மட்டுமே சம்பாதித்து விட்டு, சினிமாவைக் கொன்று கொண்டிருக்கின்றனர். ஒரு கலைஞன், எந்த நிலையிலும், வறுமையிடம் தோற்க கூடாது. அதுவே, இயற்கையிடம் எனது வேண்டுதலாக இருக்கிறது.

இவ்வாறு கணேஷ் பதிவிட்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
61 இரவில் படமான கைதி61 இரவில் படமான கைதி பேய் படத்துக்கு ஆசைப்படும் ஹன்சிகா: கல்யாண் பேய் படத்துக்கு ஆசைப்படும் ஹன்சிகா: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

vadivel - bhavani,இந்தியா
20 மே, 2019 - 11:25 Report Abuse
vadivel நடிகர்களை ஏன் குறை சொல்லுகிறீர்கள்... அவர்களுக்கு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?.... அவரை வைத்து படம் எடுத்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற பேராசை... உங்களுக்கு தகுந்த ஹீரோவை வைத்து படம் எடுக்க வேண்டியது தானே?.... திட்டமிட்டு வாழாத எந்த ஒரு நபரும் வாழ்க்கையில் இது போன்ற சூழலை சந்திக்க நேரிடும்
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
18 மே, 2019 - 12:52 Report Abuse
Mirthika Sathiamoorthi கோடிகளில் சம்பளம் வாங்கி சரியான திட்டமிடல் இல்லாமல் தயரிப்பு செலவை அதிகபடுத்தி தோல்வி படமாக்கி தயாரிப்பாளரை நடுத்தெருவில் கொண்டு விடும் இயக்குனர்களை லிஸ்ட்ல செக்கலையே ஏன்? பைனான்சியரிடம் திரைபடம் எடுக்க கடன்வாங்கி அதை வேறு வழியில் செலவு செய்து அதனால் ஏற்படும் கடைசிநேர திரைப்பட வெளியீட்டு சிக்கலுக்காக தனது சம்பளத்தை விட்டுக்கொடுத்து திரைபடம் வெளிவர உதவும் ஹீரோக்களும் உண்டு. தோல்வி அடைந்தாள் போன காசு போனதுதான்...அது உங்களுக்கு நல்லாவே தெரியும்.. ஏவிஎம் போன்ற நிறுவனங்கள் தயாரிப்பை நிறுத்த நீங்கள் குறிப்பிட்ட அந்த சினிமா கொலைகாரர்கள் மட்டும் காரணமா? ....யார் மீதோ உள்ள கோவத்தை யார் மீதோ காட்டாதீர்கள்.
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
18 மே, 2019 - 03:58 Report Abuse
 nicolethomson விஷால் நாட்டில் இருந்து வந்தவர்களால் தான் இது என்றால் நம்ப முடியுமா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in