Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்கி டோனர் தமிழ் ரீ-மேக்கில் ஹரிஷ் கல்யாண்

17 மே, 2019 - 11:56 IST
எழுத்தின் அளவு:
Harrish-Kalyan-to-act-as-Vicky-Donor-in-Tamil-remake

2011ம் ஆண்டு வெளியான கனடா படம் ஸ்டார்பக். கென் ஸ்கார் இயக்கிய இந்தப் படத்தில் பட்ரிக்ஹார்ட், ஆன்டினோ பெட்ரண்ட் நடித்திருந்தார்கள். பிரஞ்சு மொழியில் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது. காரணம் படத்தின் கதை அப்படி.

ஒரு இளைஞன், ஒரு பெண்ணுக்கு விந்து தானம் செய்கிறான். சட்டப்படி விந்து தானம் செய்தவன் யார் என்பது அந்த பெண்ணுக்கு தெரியக்கூடாது. அதையும் மீறி தனக்கு விந்து தானம் செய்தவன் இவன்தான். நம் வயிற்றில் வளர்வது இவன் குழந்தைதான் என்பதை அந்த பெண் அறிய நேர்ந்தால் என்ன நடக்கும் என்பதுதான் கதை. கிட்டத்தட்ட தமிழில் வெளிவந்த அவன் அவள் அது படத்தின் கதை மாதிரி, தமிழில் பெண் கருவை சுமந்த கதை, இதில் ஆணின் விந்து இதுதான் வித்தியாசம்.

இந்தப் படம் 2012ம் ஆண்டு இந்தியில் விக்கி டோனர் என்ற பெயரில் ரீமேக் ஆனது. ஷோகித் சர்கார் இயக்கிய படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, யாமி கவுதம் நடித்திருந்தனர். இந்தியிலும் வெற்றி பெற்றதோடு, ஏராளமான விருதுகளையும் குவித்த படம். அதன் பிறகு பெங்காலி, பஞ்சாபி மொழிகளில் ரீமேக் ஆனது.

தற்போது இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. பல பெரிய பட்ஜெட் படங்களை விநியோகம் செய்த ஸ்கிரீன் சீசன் மீடியா நிறுவனம், இதன் ரீமேக் உரிமையை வாங்கி உள்ளது. தங்கள் முதல் தயாரிப்பாக இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறது. இந்தப் படத்தில் ஹீரோவாக ஹரீஷ் கல்யாண் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் விரைவில் வெளிவரும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அமெரிக்க பட விழாவில் விருது வென்ற சிவரஞ்சனிஅமெரிக்க பட விழாவில் விருது வென்ற ... ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக ரெபோ மோனிகா ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in