Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தர்பார் முழுப்படமும் மும்பையில் படப்பிடிப்பு.?

17 மே, 2019 - 10:22 IST
எழுத்தின் அளவு:
Darbar-full-shooting-in-Mumbai

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அவர்களுடைய படப்பிடிப்பை தமிழ்நாட்டில் நடத்துவதே இல்லை. ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்ட நடிகர்கள் ஐதராபாத் அல்லது மும்பை ஆகிய ஊர்களில் தான் அவர்களது படப்பிடிப்பை நடத்துகிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக விஜய் மட்டுமே அவருடைய படப்பிடிப்புகளை இங்கு வைத்துக் கொள்கிறார்.

அஜித்தின் விஸ்வாசம், நேர் கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பும் பெரும்பாலும் ஐதராபாத்தில்தான் நடைபெற்றது. ரஜினிகாந்த் இதற்கு முன்பு நடித்த காலா, பேட்ட ஆகிய படங்களின் படப்பிடிப்பும் மும்பை, வட இந்தியாவில்தான் படமாக்கப்பட்டது. ஒரு சில காட்சிகளை மட்டுமே சென்னையில் சில நாட்கள் மட்டும் படமாக்கினார்கள்.

ரஜினிகாந்த் இப்போது நடித்து வரும் தர்பார் படப்பிடிப்பையும் மும்பையில் ஆரம்பித்து முதல் கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்தார்கள். அடுத்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பும் மே 29ம் தேதி முதல் மும்பையில்தான் நடைபெற உள்ளதாம்.

ஏ.ஆர்.முருகதாஸ் இதற்கு முன் இயக்கிய துப்பாக்கி படமும் முழுவதும் மும்பையில் தான் படமானது. அது தீவிரவாதிகளை எதிர்த்த படம். இந்த தர்பார் தாதாக்களை எதிர்க்கும் படம் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கேரளாவிலும் எதிர்பார்ப்பு!கேரளாவிலும் எதிர்பார்ப்பு! நடிகர் சங்க ஆவணங்கள் முன்னாள் நீதிபதியிடம் ஒப்படைப்பு நடிகர் சங்க ஆவணங்கள் முன்னாள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Raman Ganesan - Madurai,இந்தியா
17 மே, 2019 - 11:16 Report Abuse
Raman Ganesan விஜய் நடித்த துப்பாக்கி படம் ஏன் மும்பைல எடுத்தாங்க அதுவும் சென்னைல எடுக்க வேண்டி தானே அது ஏன் சென்னை தொழிலார்களுக்கு வேலை கொடுக்கல அடடடஎன்ன கடமை உணர்ச்சி உடனே இங்க உள்ள கருத்து கந்தசாமிகள் அவர் தமிழர் இல்ல அது தான் அப்படினு அழுகை இங்க பட பிடிப்பு வச்சு ட்ராபிக் ஜாம் ஆனா அப்பவும் பொது மக்கள் இடைஞ்சல் அப்படினு புலம்பல் இது எல்லாம் ரொம்ப பழசு version 7 கு வாங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in