Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷின் ஆங்கில படத்திற்கு பாராட்டு

16 மே, 2019 - 18:15 IST
எழுத்தின் அளவு:
Dhanush-English-movie-got-good-response

நடிகர் தனுஷ் ஏராளமான தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இதனால், தமிழில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக தொடர்ந்து இருந்து வருகிறார். அவர் ராஞ்சனா, ஷமிதாப் உள்ளிட்ட இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடித்தார். The Extrodinary of the Fakir என்ற அந்தப் படம் சமீபத்தில் பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் வெளியாகி, மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

நார்வே சர்வதேசத் திரைப்பட விழா மற்றும் பார்சிலோனா சர்வதேசத் திரைப்பட விழா உள்ளிட்ட விழாக்களில் இந்தப் படம் திரையிடப்பட்டு, சிறந்தப் படத்துக்கான விருதுகளையும், இந்தப் படம் பெற்றிருக்கிறது.

இந்தியாவில் இதுவரை வெளியாகாத இந்தப் படம், சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் வெளியானது. அங்கும் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற, ஒட்டுமொத்த படக் குழுவும் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறது.

ஸ்பெயினிலும் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் கென் ஸ்காட், ஸ்பெயின் நாட்டு மக்களும் நடிகர் தனுஷின் நடிப்பை ரசிக்கின்றனர். அதனால்தான், படம் முழு வெற்றி பெற்று இருக்கிறது என, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதற்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்திருக்கிறார்.

விரைவில், அந்தப் படத்தை இந்தியாவிலும் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கடவுளுக்கு அடுத்தபடி அம்மாதான்: சமந்தா உருக்கம்கடவுளுக்கு அடுத்தபடி அம்மாதான்: ... இசைக் கருவிகள் கூடாதா.? - ஸ்ரேயா கோஷல் காட்டம் இசைக் கருவிகள் கூடாதா.? - ஸ்ரேயா கோஷல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

ganapati sb - coimbatore,இந்தியா
22 மே, 2019 - 15:39 Report Abuse
ganapati sb பாராட்டுக்கள் தனித்திறமை வளர்த்து அனைவரின் ஆதரவையும் பெற்று சர்வதேச அளவில் புகழ் பெரும் இளையராஜா ராம்நாத் தனுஷ் போன்றோரை உதாரணமாக கொண்டாவது திருகுலத்தோர் சுயநல அரசியல்வாதிகள் மதமாற்ற வியாபாரிகள் பிரிவினைவாதிகள் வலையில் வீழ்ந்து வீணாகாமல் தேசம் அவர்களுக்கு விரும்பி தரும் வாய்ப்புகளை பற்றி அனைவரோடும் இணைந்து முன்னேறவேண்டும் .
Rate this:
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
22 மே, 2019 - 13:13 Report Abuse
Swaminathan Chandramouli உண்மையிலேயே சிறந்த நடிகர் தனுஷ்
Rate this:
தாமரை - பழநி,இந்தியா
21 மே, 2019 - 06:03 Report Abuse
தாமரை நடிகர் தனுஷ் இப்போதைய இளம் நடிகர்களில் திறமை மிக்கவர் என்பதில் சந்தேகமில்லை. தேவையற்ற சர்ச்சைகளில் சிக்காமல் சினிமாவில் அதாவது நடிப்பில் மட்டுமே கவனமாக இருந்தால் கண்டிப்பாக உலக மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுவார் என்பதில் சந்தேகமில்லை.வாழ்த்துக்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in