'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து | தமிழக வீதிகளில் லுங்கியுடன் டிவிஎஸ் வண்டியில் வலம் வரும் மம்முட்டி |
சமீபத்தில் வெளியான 'அயோக்யா' படத்தை தொடர்ந்து, சுந்தர்.சி. இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார் விஷால். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்துடன் மிஷ்கின் இயக்கும் 'துப்பறிவாளன்' படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார் விஷால்.
இந்த படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு உட்பட்ட படத்தின் ப்ரீ- புரொடக்ஷன் வேலைகள் இப்போது நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், அறிமுக இயக்குநர் ஆனந்த் என்பவர் இயக்கும் ஒரு படத்திலும் விஷால் நடிக்க இருக்கிறார். இந்த படம் 'இரும்புத்திரை' படம் மாதிரி சைபர் விஷயங்களை மையப்படுத்திய கதை. 'இரும்புத்திரை' படத்தில் நடித்தது மாதிரி இராணுவ வீரராகவே இந்த படத்தில் நடிக்கிறார் விஷால்.
இந்த படத்தின் காதாநாயகியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் அவர் போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார். இரும்புத்திரை படத்திற்கு இசை அமைத்த யுவன் சங்கர் ராஜாவே இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. இதற்கிடையில் இந்தப்படத்துக்கு இரும்புத்திரை 2 என்று விஷால் தலைப்பு வைக்க திட்டமிட்டுள்ளார். இரும்புத்திரை என்ற தலைப்பு எனக்கே சொந்தம்... அதன் இரண்டாம்பாகத்தை நானே எடுப்பேன்... இந்த தலைப்பை விஷால் பயன்படுத்தக் கூடாது என்று கூறுகிறாராம் இரும்புத்திரை படத்தின் இயக்குநரான பி.எஸ்.மித்ரன். அந்தப்படத்தின் தயாரிப்பாளரே நான்தான்... இரும்புத்திரை 2 என்ற தலைப்பு எனக்குத்தான் சொந்தம் என்கிறாராம் விஷால்.