Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் ஆகிறார் கார்த்திக் நரேன்

16 மே, 2019 - 11:46 IST
எழுத்தின் அளவு:
Karthik-naren-turn-as-Actor

22 வயதில் துருவங்கள் 16 படத்தை இயக்கி, வெற்றி பெற வைத்து திரையுலகின் கவனத்தை ஈர்த்தவர் கார்த்திக் நரேன். அடுத்து அவர் இயக்கிய நரகாசுரன் படம் எல்லா பணிகளும் நிறைவடைந்துவிட்ட நிலையில் தயாரிப்பாளர் கவுதம் மேனனுக்கும், நரேனுக்குமான பணப்பிரச்னை காரணமாக கிடப்பில் கிடக்கிறது.

இந்த நிலையில் நரேன், நாடக மேடை என்ற படத்தை இயக்க இருப்பதாக அறிவித்தார். அதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை. அடுத்து அருண் விஜய், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் ஒரு படம் இயக்கப்போவதாக சொன்னார் அதுவும் தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில் நரேன் நடிகராகிறார். திருடன் போலீஸ் படத்தை இயக்கிய கார்த்திக் ராஜு இயக்கும் கண்ணாடி என்ற படத்தில் நரேன், கல்லூரி மாணவராக நடிக்கிறார். இதில் சந்தீப் கிஷன் ஹீரோ. அன்யா சிங் ஹீரோயின், பூர்ணிமா பாக்யராஜ், முரளி ஷர்மா உள்பட பலர் நடிக்கிறார்கள். இதே படம் நின்னு வீடானி நாடேனு நானே என்ற பெயரில் தெலுங்கிலும் தயாராகிறது. "சந்தீப் கிஷன், என் நண்பர் அவர் கேட்டுக் கொண்டதால் நடிக்கிறேன். தொடர்ந்து நடிக்கும் எண்ணம் இல்லை" என்கிறார் கார்த்திக் நரேன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மே 19ல் ஜோக்கர் காயத்ரி திருமணம்மே 19ல் ஜோக்கர் காயத்ரி திருமணம் எலிப் பொறியில் சிக்கிய 'மான்ஸ்டர்' எலிப் பொறியில் சிக்கிய 'மான்ஸ்டர்'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in