Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டில்லி முதல் அரவக்குறிச்சி வரை கமல் மீது வழக்கு

15 மே, 2019 - 09:08 IST
எழுத்தின் அளவு:
More-case-file-against-Kamal

தமிழ்நாட்டில் 4 தொகுதிகளுக்கு சட்டசபை இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவன் பெயர் நாதுராம் கோட்சே" என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் கட்சி தலைவர்கள் கமலின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கமல் மீது பல்வேறு இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து சேனா அமைப்பின் சார்பில் டில்லி பாட்டியாலா கோர்ட்டில் வழக்கு தொரப்பட்டுள்ளது. தேர்தல் ஆதாயத்திற்காக இந்து மக்களை புண்படுத்தும் விதமாக பேசி உள்ளதாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் நாளை விசாரணையை தொடங்குகிறது.

இதேப்போல கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். காங்கேயத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார், சென்னை மடிப்பாக்கத்தில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி செயலாளர் போலீசில் புகார் செய்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சமூக சேவகர் கணேசனுக்கு வீடு கட்டி தந்த லாரன்ஸ்சமூக சேவகர் கணேசனுக்கு வீடு கட்டி ... நாசர் அணிக்கு ஆதரவு : ஐசரி கணேஷ் அறிவிப்பு நாசர் அணிக்கு ஆதரவு : ஐசரி கணேஷ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

ஹரிஷ், சென்னை கமல் மேல் உள்ள பயம் இந்த அரசியல்வியாதிகளுக்கு தெரிகிறது.. இது கமல் சரியான பாதையில் போய்க்கொண்டு இருக்கிறார் என்பதையும் காட்டுகிறது..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in