Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமூக சேவகர் கணேசனுக்கு வீடு கட்டி தந்த லாரன்ஸ்

15 மே, 2019 - 08:31 IST
எழுத்தின் அளவு:

கஜா புயலால் வீட்டை இழந்த சமூக சேவகர், கணேசனுக்கு, 10 லட்சம் ரூபாய் செலவில், நடிகர் ராகவா லாரன்ஸ், வீடு கட்டி கொடுத்துள்ளார்.

புதுக்கோட்டை, ஆலங்குடியைச் சேர்ந்தவர் சமூக சேவகர் கணேசன் 68. இவர், 48 ஆண்டுகளாக சமூக சேவை செய்துவருகிறார். சுனாமி பாதிப்பு துவங்கி, தானே புயல், சென்னை மழை வெள்ளம், மழையால், கேரளா மாநிலம் பாதிப்பு உட்பட பேரிடர் காலங்களில் தன் 515 என்ற எண் அம்பாசிடர் காரில் பயணித்து, பொதுமக்களிடம் வசூல் செய்து 15 லட்சம் ரூபாய்க்கு மேல் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார். இதனால், இவரை, 515 கணேசன் என்றே அழைப்பர்.

இதேப்போல் தன் அம்பாசிடர் காரில் 5,000த்துக்கும் மேற்பட்ட சடலங்களை இலவசமாக ஏற்றி உரிய இடத்தில் சேர்த்துள்ளார். தொடர்ந்து சமூக சேவையில் ஈடுபட்டு வரும் கணேசனை பாராட்டி, பெங்களுரைச் சேர்ந்த பல்கலை ஒன்று, கடந்த ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. கடந்த ஆண்டு நவ., 16ல், புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதில், கணேசன் வீடும் சேதம் அடைந்தது. வீட்டை இழந்த கணேசன், வாழ வழியின்றி தவித்து வந்தார்.

இதையறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ், கணேசனுக்கு புதிய வீடு கட்டித் தருவதாக அறிவித்து இருந்தார். அவர் கூறியபடியே ஆறு மாத காலத்தில் 10 லட்சம் ரூபாய் செலவில் கணேசனுக்கு புதிய வீட்டை கட்டினார் லாரன்ஸ். வீட்டை கணேசனிடம் ஒப்படைக்கும் விழா, ஆலங்குடியில் நடந்தது. ராகவா லாரன்ஸ் பங்கேற்று, குத்து விளக்கேற்றினார்.

லாரன்ஸ் கூறுகையில், ஆயிரக்கணக்கான மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வரும், ஆலங்குடி கணேசனுக்கு புதிய வீடு கட்டிக் கொடுத்தது, அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிரச்சனை தீர்ந்தது : களவாணி 2 விரைவில் ரிலீஸ்பிரச்சனை தீர்ந்தது : களவாணி 2 ... டில்லி முதல் அரவக்குறிச்சி வரை கமல் மீது வழக்கு டில்லி முதல் அரவக்குறிச்சி வரை கமல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in