Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கள்ள ஓட்டு போட்டேனா? - சிவகார்த்திகேயன்

14 மே, 2019 - 10:14 IST
எழுத்தின் அளவு:
Voting-issue-:-Sivakarthikeyan-angry

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படம் வரும் மே 17ம் தேதி ரிலீஸாகிறது. பத்திரிக்கையாளர்களிடம் சிவகார்த்திகேயன் பேசியதாவது: நடுத்தர வீட்டு பையனுக்கும், பணக்கார வீட்டு பொண்ணுக்கும் இடையேயான மோதல், காதல் தான் மிஸ்டர் லோக்கல்.

50 சதவீதம் குறும்பு, 50 சதவீதம் பொறுப்பும் கலந்த படம். டாஸ்மாக் இல்லாத ராஜேஷ் படம். இது மன்னன் படத்தின் ரீ-மேக் கிடையாது. எனது நடிப்பில் அடுத்தடுத்து வரும் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இதுமாதிரி கதைகளில் நடிக்க எனக்கே ஆர்வமாக உள்ளது.



காமெடியில் தான் என் வாழ்க்கை தொடங்கியது. அதனால் காமெடி நடிகர்களுடன் நடிக்கும் போது எனக்கு இன்னும் சவுகரியமாக இருக்கிறது. ஆகையால் மிஸ்டர் லோக்கல் போன்று காமெடி படங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். படத்தில் முத்தக்காட்சி கனவில் கூட கிடையாது.

ஓட்டளித்த விவகாரத்தில் என் மீது எந்த தவறும் கிடையாது. கடந்த இரண்டு தேர்தல்களில் நான் அங்கு தான் ஓட்டு போட்டேன். என்னிடம் வாக்காளர் அடையாள அட்டை இருந்தது, ஓட்டு போட்டேன். நான் கள்ள ஓட்டு போட்டேன் என்று கூறுவதே தவறு. வாக்காளர் பட்டியலில் என் பெயர் நீக்கப்பட்டது என் தவறு கிடையாது.

என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றோ, விசாரணைக்கு அழைக்கப்படுவேன் என்றோ தேர்தல் அதிகாரி சொல்லவில்லை. அப்படி விளக்கம் கேட்டால் அதற்கு நான் என் விளக்கத்தை தருவேன். நான் இந்திய ஜனநாயகத்தின் மீதும், சட்டத்தின் மீதும் நம்பிக்கை உள்ளவன்.

இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மிஸ்டர் லோக்கல் ஜாலியான படம் : சிவகார்த்திகேயன்மிஸ்டர் லோக்கல் ஜாலியான படம் : ... ஜோதிகா, கார்த்தியுடன் இணையும் அம்மு அபிராமி ஜோதிகா, கார்த்தியுடன் இணையும் அம்மு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Shanu - Mumbai,இந்தியா
14 மே, 2019 - 13:02 Report Abuse
Shanu ஒட்டு லிஸ்டில் பெயர் இல்லாமல் ஒட்டு போட்டால், அது கள்ள ஒட்டு தானே. அறிவு வேண்டாம்?? இவனுக்கு அறிவு இல்லை என்றால், அங்கு இருந்த தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவு இல்லையா??
Rate this:
Sridharan Venkatraman - Chennai,இந்தியா
14 மே, 2019 - 10:29 Report Abuse
Sridharan Venkatraman பொறுப்பற்ற பேச்சு. படித்தவர்கள் வோட்டர் லிஸ்ட் சரி பார்க்காமல் வோட்டு போடுவதும், சப்பைக்கட்டு கூறுவதும் ஏற்க முடியாது. என்னுடைய பெயரை பட்டியலில் சேர்க்கவும் (ஊர் மாறியதால்) வோட்டு போடவும் சிறிதளவு முயற்சி செய்தேன். இரண்டு மாதத்துக்குள் நல்லபடி முடிந்ததும், மிகுந்த திருப்தி கிடைத்தது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in