Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விமல் மீது பண மோசடி புகார்

12 மே, 2019 - 11:13 IST
எழுத்தின் அளவு:
Complaint-against-actor-Vimal

நடிகர் விமல் நடித்திருக்கும் களவாணி படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர இருக்கிறது. இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று விநியோகஸ்தர் சிங்காரவேலன் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றார். இயக்குனர் சற்குணம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடையை ரத்து செய்ய வைத்தார். அதன்பிறகும் படத்தை வெளியிட விடாமல் தடுத்து தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக சற்குணம், சிங்காரவேலன் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்திகல் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சிங்காரவேலனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி நேற்று எழும்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார் சிங்காரவேலன். அத்துடன் விமல் மீது ஒரு கோடியே 50 லட்சம் மோசடி செய்ததாக புகார் மனுவும் கொடுத்தார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

களவாணி2 படத்தின் காப்புரிமையை கொடுப்பதாக கூறி நடிகர் விமல் என்னிடம் ஒரு கோடியே 50 லட்சம் வாங்கினார். அதற்கான ரசீது என்னிடம் உள்ளது. அவற்றை போலீசிடம் ஒப்படைத்துள்ளேன். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திடீரென்று 'களவாணி-2' படத்தை சற்குணம் தயாரித்திருக்கிறார். எனக்கும், அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூற தொடங்கினார். அப்போது எங்களிடம் வாங்கிய பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டோம்.

அப்போது படத்தின் காப்புரிமையை வாங்கி தந்து விடுகிறேன் என்றார். இப்போது படத்தின் தயாரிப்பாளர் சற்குணம் இன்னொருவருக்கு படத்தின் காப்புரிமையை கொடுத்துவிட்டார் என்று நடிகர் விமல் கூறுகிறார். அவர் எங்களை திட்டமிட்டு ஏமாற்றிவிட்டார். அதனால் அவர் மீது மோசடி புகார் கொடுத்துள்ளேன். வழக்கும் தொடர இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
என்ன ஒரு அயோக்கியாத்தனம் : பார்த்திபன் குற்றச்சாட்டுஎன்ன ஒரு அயோக்கியாத்தனம் : ... நடிகர் சங்க நில மோசடி வழக்கில், விஷால் ஆஜராகவில்லை நடிகர் சங்க நில மோசடி வழக்கில், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in