தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சி : பாலிவுட் அதிர்ச்சி | மேடையில் கண்கலங்கிய ஐஸ்வர்ய லட்சுமி | ஆண்ட்ரியாவுக்கு முதன்முறை | சீரியலில் மாஸான என்ட்ரி : வனிதாவின் புது ட்ராக் | அழகு நாயகிகளின் ரீ-யூனியன் | சிகரெட் பிடிக்கும் ‛‛சிவன்'', ‛‛பார்வதி'': லீனாவின் அடுத்த ‛‛குசும்பு'' | பொன்னியின் செல்வன் - குந்தவையாக த்ரிஷா | நரேன் வேடத்தை பெண்ணாக மாற்றிய அஜய் தேவ்கன் | காமெடி நடிகரிடம் மன்னிப்பு கேட்ட அடார் லவ் இயக்குனர் | ஐந்து நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்ட யானை |
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தில் அவருடைய ஜோடியாக ஈஷா ரெப்பா நடித்து வருகிறார். இவர் இதற்கு முன் தமிழில் 2016ம் ஆண்டில் வெளிவந்த 'ஓய்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர். தெலுங்கில் 'தர்ஷகடு, அரவிந்த சமேதா வீர்ராகவா, சுப்பிரமணியபுரம், சவ்யசாச்சி' உள்ளிட்ட சில தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் அவர் நடித்த முதல் படமான 'ஓய்' வெற்றி பெறவில்லை. மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார். தற்போது திருநெல்வேலியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பின் புகைப்படங்கள் சிலவற்றை அவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
எழில் கடைசியாக இயக்கிய 'சரவணன் இருக்க பயமேன்' படம் தோல்வியடைந்து. அதன்பின் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்க 'ஜெகஜ்ஜால கில்லாடி' என்ற படத்தை இயக்க ஆரம்பித்தார். அப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்விட்டது. அதற்கிடையில் இப்போது ஜிவிபிரகாஷ், ஈஷா ரெப்பா நடிக்கும் படத்தை ஆரம்பித்துவிட்டார்.