Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொலைகாரன் : டென்ஷனில் விஜய் ஆண்டனி

08 மே, 2019 - 12:52 IST
எழுத்தின் அளவு:
Kolaigaran-:-Vijay-Antony

விஜய் ஆண்டனியும், அர்ஜுனும் முதன் முதலாக இணைந்து நடிக்கும் 'கொலைகாரன்' படத்தை ஆண்ட்ரூ லூயிஸ் என்ற அறிமுக இயக்குனர் இயக்குவதாக விஜய் ஆண்டனி தரப்பில் சொல்லி வருகின்றனர். உண்மையில் ஆண்ட்ரூ லூயிஸ் என்ற அறிமுக இயக்குனர் இல்லை. அவர் ஏற்கனவே 2012ல் வெளியான லீலை என்ற படத்தை இயக்கியுள்ளார். லீலை படம் மிகப்பெரிய தோல்வியடைந்ததால் அவருக்கு அடுத்தப்படம் கிடைக்கவில்லை.

பட வாய்ப்புக்காக கடந்த 6 ஆண்டுகளாக முயற்சி செய்தவர், தற்போது கொலைகாரன் படத்தை இயக்கி வருகிறார். த்ரிஷ்யம் படத்தின் ஒரிஜினல் நாவலில் இருந்து கதையை எடுத்து கொலைகாரன் படத்தை இயக்கியுள்ளார். ரிலீஸ் நேரத்தில் பிரச்சனை வரக்கூடாது என்பதால் கடைசி நேரத்தில் ஜப்பானிய எழுத்தாளரிடமிருந்து ரைட்ஸ வாங்கியுள்ளனர்.

இது ஒரு பக்கம் இருக்க, சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் இரண்டு மூன்று படங்கள் தொடர் தோல்வியை சந்தித்ததால் கொலைகாரன் படத்தை எப்படியாவது வெற்றி படமாக ஆக்கிவிட வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறார். அதேசமயம் கொலைகாரன் படத்தின் ரிசல்ட் எப்படி இருக்க போகிறது என்கிற டென்ஷனிலும் இருக்கிறாராம் விஜய் ஆண்டனி.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அவதார் 2,3,4,5 - ரிலீஸ் தேதிகள் அறிவிப்புஅவதார் 2,3,4,5 - ரிலீஸ் தேதிகள் அறிவிப்பு சூர்யாவின் கால்ஷீட் கிடைத்தது எப்படி? சூர்யாவின் கால்ஷீட் கிடைத்தது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
11 மே, 2019 - 19:33 Report Abuse
அசோக்ராஜ் லீலை அருமையான காதல் படம். மாடல்கள் நடித்தது. சரியாக மார்க்கெட்டிங் செய்யப்படவில்லை. Youtube-இல் பார்க்கலாம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in