Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அவதார் 2,3,4,5 - ரிலீஸ் தேதிகள் அறிவிப்பு

08 மே, 2019 - 12:23 IST
எழுத்தின் அளவு:
Avatar-sequels-Date-announced

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளிவந்து உலக அளவிலான வசூலில் தற்போது வரை முதலிடத்தில் இருக்கும் படம் 'அவதார்'. 2.78 பில்லியன் வசூல் புரிந்து கடந்து பத்து வருடங்களாக இந்த சாதனை முறியடிக்கப்படாமல் இருக்கிறது. 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' இந்த வசூலை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் 'அவதார்' படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் எப்போது வெளியாகும் என்பதை அதன் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி அறிவித்துள்ளது. மேலும் 2027ம் ஆண்டு வரையில் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் விடுமுறையிலும் அவர்களது படங்கள் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது. அதன்படி வெளியாக உள்ள படங்கள் வருமாறு...

2019 - ஸ்டார் வார்ஸ் - 9 - தி ரைஸ் ஆப் ஸ்கைவாக்கர்
2020 - க்ரூயெல்லா அன்ட் வெஸ்ட் சைட் ஸ்டோரி
2021 - அவதார் 2
2022 - ஸ்டார் வார்ஸ் மூவி
2023 - அவதார் 3
2024 - ஸ்டார் வார்ஸ் மூவி
2025 - அவதார் 4
2026 - ஸ்டார் வார்ஸ் மூவி
2027 - அவதார் 5

ஒவ்வொரு இரண்டு வருட இடைவெளியிலும் அவதார் 2 (டிசம்பர் 17, 2021), அவதார் 3 (டிசம்பர் 22, 2023), அவதார் 4 (டிசம்பர் 12,2025), அவதார் 5 (டிசம்பர் 17, 2027), ஆகியவை வெளியாக உள்ளன. ஆக, அடுத்த எட்டு வருடங்களுக்கு 'அவதார்' ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் 63, லீக் ஆன போட்டோவிஜய் 63, லீக் ஆன போட்டோ கொலைகாரன் : டென்ஷனில் விஜய் ஆண்டனி கொலைகாரன் : டென்ஷனில் விஜய் ஆண்டனி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
09 மே, 2019 - 12:50 Report Abuse
Vasudevan Srinivasan கிராபிக்ஸ் குறிப்பிட்ட காட்சிகளுக்கு பயன்படுத்தலாம் ஆனால் முழு படத்தையும் கிராபிக்ஸ் என்றால் பொம்மை படம் போலத்தான் இருக்கும்.. அது சரி அதற்கும் ஒரு அதிமேதாவித்தனமான பைத்தியக்காரக் கூட்டம் இருக்கே..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in