Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மக்கள் செல்போனுக்கு அடிமையாகி விட்டார்கள் : லதா ரஜினி வருத்தம்

08 மே, 2019 - 10:28 IST
எழுத்தின் அளவு:
People-slave-to-Technology-says-Latha-Rajinikanth

நடிகர் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், தயா பவுண்டேஷன் என்ற அமைப்பை ஏற்படுத்தி பல்வேறு சமூக சேவைகள் செய்து வருகிறார். குறிப்பாக பீஸ் பார் சில்ரன் என்ற பெயரில் குழந்தைகள் பாதுகாப்பு இயக்கம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் தெருவோர சிறுவர் சிறுமிகள், தனித்து விடப்படும் சிறுவர்கள், ஆகியோரை கண்டெடுத்து அவர்களை பாதுகாக்கும் முயற்சியை செய்து வருகிறார். காணாமல் போகும் குழந்தைகளை தேடி கண்டுபிடிக்கவும் இதன் மூலம் ஏற்பாடுகள் செய்கிறார். தனது அமைப்பு மூலம் பயன்பெற்ற குழந்தைகளை பத்திரிகையாளர்களுக்கு நேற்று அறிமுகப்படுத்திய லதா ரஜினிகாந்த் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

அண்மையில் தமிழ்நாட்டில், இந்தியாவில் குழந்தைகள் காணாமல் போவதும், கடத்தப்படுவதும், ஆதரவற்று இருப்பதும், கொல்லப்படுவதும் இதுபோன்ற விஷயங்கள் நடந்து வருவதை எங்களால் பட்டியலிட முடியவில்லை. இவற்றையெல்லாம் நினைத்துப்பார்த்தால் மனம் தாங்கவில்லை. நம்மை சுற்றி இருக்கும் குழந்தைகளும், ஆதரவற்ற குழந்தைகளும் பாதுகாக்க வேண்டியது நம் சமுதாயத்தின் முதல் கடமை.

அந்தக்காலத்தில் ஒருவர் வீட்டில் இருக்கும் குழந்தையை பற்றி பக்கத்துக்கு வீட்டு ஆட்களுக்கு தெரியும். ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்தார்கள். அப்பொழுது ஒரு பாதுகாப்பு வளையம் இயற்கையாகவே இருந்தது. குழந்தைகள் பாதுகாப்பு அக்கறை பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் வேண்டும். நம் இந்திய கலாச்சாரமே ஒருவருக்கொருவர் பங்கிட்டு வாழ்வது தான்.

தற்போது டெக்னலாஜி பெரியதாக வளர்ந்து விட்டது. பெரும்பாலான மக்கள் செல்போனுக்கு அடிமை ஆகிவிட்டார்கள். இதனால் கூட குழந்தை பாதுகாப்பில் கவனக்குறைவு ஏற்படுகிறது. எங்கள் அமைப்பின் மூலம் குழந்தை கல்வி, குழந்தை காணாமல் போகுதல் குழந்தைகளுக்கான பல பிரச்சனைகளை தீர்வு கண்டு வருகிறோம்.

செய்தித்தாள்கள் மூலமாகவோ , அல்லது வேறு வகையிலோ கிடைக்கும் தகவல்களை வைத்து எங்கள் அமைப்பின் குழுவினர்கள் அந்தந்த இடத்திற்கு சென்று உதவிகளை செய்து வருகிறார்கள். உங்கள் ஊரில் இது போன்ற அமைப்பை உருவாக்கி குழந்தைகளுக்காக பாதுகாப்பு வளையத்தை உருவாக்க நினைத்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம். அதற்கான வழிமுறைகளை நாங்கள் சொல்ல தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறைந்த மனகசப்பு : மீண்டும் ஒரே மேடையில் இளையராஜா - எஸ்பிபி.,மறைந்த மனகசப்பு : மீண்டும் ஒரே ... தமிழக மக்கள் பற்றி பாக்யராஜ் டவுட்.? தமிழக மக்கள் பற்றி பாக்யராஜ் டவுட்.?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Raman Ganesan - Madurai,இந்தியா
08 மே, 2019 - 17:27 Report Abuse
Raman Ganesan இதுக்கும் visil george இன்னும் பல
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in