Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மறைந்த மனகசப்பு : மீண்டும் ஒரே மேடையில் இளையராஜா - எஸ்பிபி.,

07 மே, 2019 - 19:12 IST
எழுத்தின் அளவு:
Ilayaraja---SPB-backs

தமிழ் சினிமாவின் இசை பொக்கிஷம் இளையராஜா என்றால் மிகையல்ல. இவரது இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய எண்ணிலடங்கா பாடல்கள் இன்றும் ரிங்காரமாய் ஒலித்து கொண்டிருக்கின்றன. ஆனால், ராயல்டி விவகாரத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பு பெரும் பிரச்னையாய் வெடித்தது.

"இளையராஜா இசையில் வெளிவந்த பாடல்களை நான் பாட மாட்டேன்" என எஸ்பிபி சொல்லும் அளவுக்கு இவர்களது பிரச்னை பெரிதானது. மீண்டும் இவர்களது இசையை மேடையில் கேட்க முடியுமா என ரசிகர்கள் ஏங்கினர். அதற்கு பலனாக சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த இசை நிகழ்ச்சியில் இளையராஜாவின் பாடல்களை பாடினார் எஸ்.பி.பி. அங்கிருந்த ரசிகர்கள் இன்னிசை மழையில் நனைந்தே போயினர்.

இந்நிலையில், இளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் இடையேயான கருத்து வேறுபாடு மறைந்து போய்விட்டதாக கூறப்படுகிறது. அதற்கு சான்றாக, வருகிற ஜூன் 2ம் தேதி, இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி, சென்னையில் இளையராஜா இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாட போவதாக தெரிகிறது. மேலும் கே.ஜே.யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, மனோ, உஷா உதூப் போன்ற பல பிரபல பாடகர்களும் பாட உள்ளதாக தகவல்.

இளையராஜா - எஸ்.பி.பி., மீண்டும் ஒரே மேடையில் தோன்ற இருப்பது இசை ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. ஆக மீண்டும் இளைய நிலா பொழிய போகிறது...!

Advertisement
கருத்துகள் (21) கருத்தைப் பதிவு செய்ய
'டைட்டானிக்' சாதனையை முறியடித்த 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்''டைட்டானிக்' சாதனையை முறியடித்த ... மக்கள் செல்போனுக்கு அடிமையாகி விட்டார்கள் : லதா ரஜினி வருத்தம் மக்கள் செல்போனுக்கு அடிமையாகி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (21)

malimar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18 ஜூன், 2019 - 16:46 Report Abuse
malimar There is no sense to Bala. It is a great shame.
Rate this:
Nagarajan L. Royal - chennai,இந்தியா
10 மே, 2019 - 12:32 Report Abuse
Nagarajan L. Royal சூப்பர் ஓ சூப்பர்
Rate this:
Nagarajan L. Royal - chennai,இந்தியா
10 மே, 2019 - 12:32 Report Abuse
Nagarajan L. Royal super
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
09 மே, 2019 - 18:08 Report Abuse
Vasudevan Srinivasan மேடை கச்சேரி மட்டுமல்ல மீண்டும் இசைஞானியின் கொடி பட்டொளி வீசிப் பறக்க வேண்டும் இன்றைய காட்டுத்தனமான கம்ப்யூட்டர் இசை ஒழிந்து இசைஞானியின் தென்றல் வீசவேண்டும் தமிழ்த்திரை இசை புத்துயிர் பெறவேண்டும்..
Rate this:
K.P SARATHI - chennai,இந்தியா
08 மே, 2019 - 19:43 Report Abuse
K.P  SARATHI இதில் யார் பூ யார் நார் யாருடன் சேராமல் இசைஞானி வென்று விட்டார் அவரை பிரிந்தவர்கள் நிலைமை
Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in