Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரகாஷ்ராஜிற்கு எதிர்ப்பு வலுக்கிறது

06 மே, 2019 - 14:03 IST
எழுத்தின் அளவு:
More-Oppose-for-Prakashraj

கன்னட சினிமாவில் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்தபோது கே.பாலசந்தரால் டூயட் படத்திற்காக கோலிவுட்டுக்கு அழைத்து வரப்பட்டவர் நடிகர் பிரகாஷ்ராஜ். தொடர்ந்து பாலசந்தர் படங்களில் நடித்து புகழடைந்த அவர், பின்னர் தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகரானார். அதோடு டூயட் முவீஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி பல படங்களை தயாரித்து, அதில் கதையின் நாயகனாகவும் நடித்த பிரகாஷ்ராஜ், சில படங்களையும் இயக்கினார்.

இப்படி தமிழ் சினிமா உலகமும், தமிழக ரசிகர்களும் அவருக்கு பெரிய இடத்தை கொடுத்து ஆதரித்தார்கள். அந்த வகையில் நூற்றுக்கணக்கான தமிழ்ப் படங்களில் நடித்து புகழடைந்தவர் பிரகாஷ்ராஜ்.

சமீபத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து டில்லியில் பிரச்சாரம் செய்த அவர், தமிழ் மாணவர்களால் டில்லியில் உள்ள மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோய் வருவதாக ஒரு பேட்டியில் பதிலளித்துள்ளார். இது மாணவர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் செயல் என்று டில்லியில் உள்ள தமிழ் மாணவர் அமைப்பு அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், தயாரிப்பாளர் கே.ராஜனும் பிரகாஷ்ராஜ்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ஒரு செய்தியில், தமிழர்களால் பெரிய நடிகராக வளர்ந்த பிரகாஷ்ராஜ் நன்றி மறந்து தமிழர்களுக்கு எதிராக பேசுகிறார். தனது இந்த பேச்சுக்கு தமிழர்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் புதிதாக தமிழில் அவரை எந்த படத்திலும் நடிக்க விடமாட்டோம். அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆனால் இப்படி தனக்கு எதிரான கருத்துக்கள் தமிழர்கள் மத்தியில் இருந்து எழுந்திருப்பதை அடுத்து, நான் சொல்லப்பட்ட கருத்து உள்நோக்கத்துடன் திரித்து வெளியிடப்பட்டுள்ளது என்று ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் பிரகாஷ்ராஜ்.

Advertisement
கருத்துகள் (27) கருத்தைப் பதிவு செய்ய
மாரடைப்பு முதலுதவி விழிப்புணர்வு குறும்படத்தில் சத்யராஜ் - விஜய்சேதுபதிமாரடைப்பு முதலுதவி விழிப்புணர்வு ... மகரிஷி - சென்னையில் அதிகாலை காட்சி மகரிஷி - சென்னையில் அதிகாலை காட்சி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (27)

s t rajan - chennai,இந்தியா
13 மே, 2019 - 04:56 Report Abuse
s t rajan ப்ரகாஷ் ராஜ் நல்ல நடிகர் தான். ஆனால் அரசியல், மதம், நம் கலாச்சாரம், மொழி போன்ற sensitive விஷயங்களில் தெளிவான அறிவோ அனுபவமோ இல்லாதவர் என்று பல தொலைக்காட்சி உரையாடல்களில் தெளிவுபடக் கண்டிருக்கிறோம். எப்படி திறமையான வடிவேலு பேசத் தெரியாமல் பேசி தொழிலும் தன் இடத்தை இழந்தாரோ அதே மாதிரி பிரகாஷ்ராஜும் ஆகிவிட்டார்.
Rate this:
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
12 மே, 2019 - 16:39 Report Abuse
Sathyanarayanan Bhimarao சிவாஜி கணேசனைப் பற்றி மிகவும் அவதூறாகப் பேசி மனோரமாவிடம் அசிங்கமாக உதைபட்டவர் இவர். அப்போது 'ஐயோ பாவம் ' என்று அனுதாப பட்டவர்களில் நானும் ஒருவன். இப்போது மனோரமா இல்லையே என்று வருத்தப் படுகிறேன்.
Rate this:
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
10 மே, 2019 - 11:19 Report Abuse
Subburamu Krishnaswamy Pack up to Karnataka
Rate this:
Indian - chennai,இந்தியா
09 மே, 2019 - 19:11 Report Abuse
Indian If we believe " Aala poran tamilan", then we should come out of cinema field. it is simply making money with people emotions.
Rate this:
kumar - chennai,இந்தியா
08 மே, 2019 - 15:13 Report Abuse
kumar பிரகாஷ்ராஜ் சொன்னது தப்பு தான். ஆனா எனக்கு ஒன்னு புரியல. இதே கூட்டம் தான் சொல்லிச்சு, தமிழ்நாட்டு வேலையே வடநாட்டு காரன் பறிக்காரான்னு, இங்க ஒருத்தன் சொன்னான், என் அப்பன் ஆத்தா கட்டின கல்லுரியில் வடநாட்டு காரன் படிக்கறான்னு சொன்னான், அதுக்கும் இந்த கூட்டம் ஆதரவான கருத்து போட்டுச்சு. பிரகாஷ்ராஜ் சொன்னனதும் இங்க சீமான் சொன்னதும் ஒண்ணுதான.
Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in