ரிட்டர்ன் டிக்கெட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தலைமறைவு நடிகர் | இன்று 85வது பிறந்தநாள் : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ‛ஆச்சி' மனோரமா | சில்க் ஸ்மிதாவுக்கு சமர்ப்பணம் செய்த காஜல் பசுபதி | உன் குறிக்கோள் சரியாக இருந்தால் ஒவ்வொரு அடியும் உனக்கானது : கேப்ரில்லா செல்லஸ் | விதவிதமான புடவைகளில் அழகாக போஸ் கொடுத்த கண்மணி மனோகரன்! | ஆல்யாவை போல போஸ் கொடுத்த அய்லா | உங்களில் யார் அடுத்த ஸ்டார் : ஜீ தமிழ் நடத்தும் மெகா ஆடிசன் | நவாசுதீன் சித்திக்கிற்கு பிரென்சு ரிவேரியா விருது | கங்குலி வாழ்க்கையை இயக்குவது ஐஸ்வர்யா ரஜினிகாந்தா? | பிக்பாஸ் 6ல் இமானின் மாஜி மனைவி பங்கேற்கிறாரா? |
சமீபத்தில் என்.டி.ராமராவ் வாழ்க்கை சினிமாவாக வெளிவந்தது. அந்தப் படத்தின் டைட்டில் கதாநாயகுடு. இதே தலைப்பில் 1969ம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு படத்திலும் என்.டி.ஆர்.தான் ஹீரோ. அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஜெயலலிதா. ஹேமபாரதாரா ராவ் இயக்கி இருந்தார்.
இதேபடம், அதே ஆண்டில் தமிழில் எம்.ஜி.ஆர் நடிப்பில் நம்நாடு என்ற பெயரில் ரீமேக் ஆனது. என்.டி.ஆர் நடித்த கேரக்டரில் எம்.ஜி.ஆர் நடித்தார். அவர் ஜோடியாக ஜெயலிதா நடித்தார். சி.பி.ஜம்புலிங்கம் இயக்கினார். எம்.எஸ்.விஸ்வாநாதன் இசை அமைத்திருந்தார். விஜயா புரொடக்ஷன் தயாரித்தது. இது ஒரு நேர்மையான அரசு ஊழியரின் கதை.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் எஸ்.வி.ரங்காராவ், அசோகன், தங்கவேலு, ராம்தாஸ், மனோகர், தேங்காய் சீனிவாசன், நாகேஷ், குட்டி பத்மினி உள்பட பலர் நடித்திருந்தார்கள். நடிகை ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். தெலுங்கு படமாக இருந்தாலும் தமிழுக்கு ஏற்றபடி பல மாறுதல்களை செய்திருந்தார் எம்.ஜி.ஆர்.
வாலியின் பாடல் வரிகளில் எம்எஸ்.விஸ்வநாதன் இசையில் "நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே..., நான் 7 வயசுலேயே இளநீ வித்தவ..., நினைத்ததை நடத்தியே முடிப்பவன்..., வாங்கய்யா வாத்தியார் அய்யா..., ஆடை முழுதும் நனைய நனைய மழையடிக்குதடி..." உள்ளிட்ட அற்புதமான பாடல்களும் இடம் பெற்று இருந்தன. நம்நாடு படத்துக்கு இது பொன்விழா ஆண்டு.