Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பறப்பதைப் போல உணர்கிறேன்: செல்வக் கண்ணன்

06 மே, 2019 - 10:54 IST
எழுத்தின் அளவு:
I-feel-flying-says-Nedunalvaadai-director

கோடிகளைக் கொட்டி எடுக்கப்படும் படங்கள் மத்தியில் சிறு முதலீட்டுப் படங்களும் அவ்வப்போது எடுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அந்தப் படங்கள், வசூல் ரீதியில் பெரிய வெற்றியைப் பெற முடியாவிட்டாலும், தகுதியின் அடிப்படையில் பல விருதுகளைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

அந்த வரிசையில், சிறு முதலீட்டுப் படமாக தமிழில் எடுக்கப்பட்டு, கடந்த மார்ச் 15ல் ரிலீசான தமிழ் படம் நெடுநெல்வாடை. அஞ்சலி நாயர், இளங்கோ, பூ ராமு உள்ளிட்ட பல புதுமுகங்கள் படத்தில் நடித்திருந்தனர். புதுமுக இயக்குநர் செல்வக் கண்ணன் படத்தை இயக்கி இருந்தார். படம் கட்டாயம் தேசிய விருது பெறும் என ஏற்கனவே சொல்லி இருந்தார் இயக்குநர் செல்வக் கண்ணன்.

தற்போது, பெங்களூரில் இனோவேட்டிவ் பிலிம் அகாடமி (Innovative film academy) சார்பில் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. அந்த விழாவின் ஒரு நிகழ்வாக விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. 26 நாடுகளில் இருந்து 105 படங்கள் விருதுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அதில், தமிழ்ப் படமான நெடுநெல்வாடையும் ஒன்று. படத்தைப் பார்த்த தேர்வு குழுவினர் நெகிழ்ந்து போனார்கள். படத்தை பாராட்டி, படத்துக்கு விருதும் அளித்துள்ளனர்.

இது குறித்து படத்தின் இயக்குநர் செல்வக் கண்ணன் கூறியிருப்பதவது : மிகப் பெருமையாக இருக்கிறது. நிறைய நாடுகளில் இருந்து நிறைய பேர் விழாவுக்கு வந்திருந்தனர். பல நாட்டுப் படங்களும் விருதுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அந்தப் படங்களோடு, நெடுநெல்வாடையும் கலந்து கொண்டு விருது பெற்றிருக்கிறது என்பதை நினைக்க நினைக்க பெருமையாக இருக்கிறது. படத்தை, விருதுக்காக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அனுப்பி வைத்த போதே, பாதி வெற்றி பெற்றது போல உணர்ந்தேன். இப்போது, படத்துக்கு விருதும் அறிவிக்கப்பட்ட பின் பறப்பது போல உணர்கிறேன்.

எங்களைப் போல வளரும் கலைஞர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக இந்த விருது அறிவிப்பு இருக்கிறது. தகுதியான படைப்புக்கு விருது வழங்கி கவுரவித்த அனைவருக்கும் இந்த தகுதியான நேரத்தில் என்னுடைய வணக்கங்களையும்; நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கோமாளிக்காக உடல் எடையை குறைத்த ஜெயம் ரவிகோமாளிக்காக உடல் எடையை குறைத்த ... தேவதைகளால் நிறைவேறிய கனவு: கொட்டாச்சி தேவதைகளால் நிறைவேறிய கனவு: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
06 மே, 2019 - 19:02 Report Abuse
Vasudevan Srinivasan கண்ணன் அருளால் செல்வம் பெருகட்டும் திரு. செல்வக்கண்ணனுக்கு.. விருதுகள் மட்டுமல்ல நல்ல வாய்ப்புகளும் குவியும்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in