Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோமாளிக்காக உடல் எடையை குறைத்த ஜெயம் ரவி

06 மே, 2019 - 10:34 IST
எழுத்தின் அளவு:
Jayamravi-lost-weight-for-Komali

ஒன்பது கெட்-அப்களில் கோமாளி படத்தில் நடித்திருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கெட்-அப்களை வெளியிட்டு, படத்துக்கான புரமோஷன் வேலைகளில் இறங்க படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். கோமாளி படம் குறித்து, படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் கூறியதாவது:

தொழில் நுட்பம் ரொம்பவே வளர்ந்து விட்டது. உலகில் எந்த மூலையில் இருக்கும் ஒரு நபரையும், நினைத்த மாத்திரத்தில் தொடர்பு கொண்டு பேச முடியும். ஆனால், செல்போனிலேயே மொத்த உலகமும், சர்வசதா காலமும் மூழ்கி கிடக்கிறது. இதுதான், கோமாளி படத்துக்கான கதைக்களம்.

கோமாளி படத்தின் கதையை தயார் செய்து, அதை வேல்ஸ் நிறுவனத்திடம் சொன்னேன். தயாரிப்பாளர் தரப்பில் இருந்து, இந்தப் படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். உடனே, ஜெயம் ரவிக்கு, கதை சொன்னேன். அவருக்கு பிடித்துப் போய் விட்டது.

ஒன்பது கெட்-அப்களையும் சிறப்பாக செய்து கொடுக்க ஜெயம் ரவி ஆர்வமாக ஒப்புக் கொண்டார். படத்தின் கதை படி, ஜெயம் ரவி, உடல் எடையைக் குறைத்து, ஏற்ற வேண்டும். அவர் ஒப்புக் கொள்வாரா என தயக்கம் இருந்தது. அதையும் ஏற்றுக் கொண்டார். படம் துவங்குவதற்கு முன்பாகவே, 15, 20 என படிப்படியாக எடையைக் குறைத்தார்.

ஜெயம் ரவியின் அடங்க மறு; தனி ஒருவன் போன்று படம் சீரியசாக இருக்காது. சந்தோஷ் சுப்பிரமணியன் போல, நகைச்சுவையாக இருக்கும். படத்தின் சில காட்சிகளில், இரண்டு மூன்று ஜெயம் ரவி தோன்றுவர். ஆனால், படம் மிகச் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக, காஜல் அகவர்வால், சம்யுக்தா ஹெக்டே இருவரும் நடித்துள்ளனர். படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு பிரதீப் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
படத்துக்கு விருது : தனுஷ் சந்தோஷம்படத்துக்கு விருது : தனுஷ் சந்தோஷம் பறப்பதைப் போல உணர்கிறேன்: செல்வக் கண்ணன் பறப்பதைப் போல உணர்கிறேன்: செல்வக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in