இரண்டிலும் தொடர விரும்புகிறேன்! | ஸ்ரீரெட்டியின் சாதனை! | விதியை கூறும், 'பச்சை விளக்கு' | வில்லனான பிரபல ஓவியர்! | கேட்டு வாங்கிய முத்தம்! | மணிரத்னம் - ஏ.ஆர்.முருகதாஸ் போட்டி! | என் வீட்டிற்கு வர வேண்டாம்! | எனக்கு திருப்புமுனை தந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ்- அனிருத் | ரஜினி எடுத்த சபதம் | ரஜினியை தப்பா பேசினா நானும் பேசுவேன் : லாரன்ஸ் |
நடிகர் சித்தார்த் தற்போது 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். நடிப்பதோடு நிற்காமல் டுவிட்டரில் அடிக்கடி பொதுப் பிரச்சினைகளைப் பற்றி டுவீட் போட்டு சர்ச்சையையும் ஏற்படுத்துவார்.
இன்று அவர் போட்ட டுவீட் ஒன்று ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதாக உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் அவர் பேட்டி எடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். “மீண்டும் நீங்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலையில், என்னுடன் ஒரு பேட்டி ஒன்றுக்கு உங்களுக்கு ஆலோசனை சொல்கிறேன். நீங்கள் எப்படி பழம் சாப்பிடுவீர்கள், எப்படி தூங்குவீர்கள், உங்கள் வேலைமுறை எப்படி மற்றும் உங்கள் பர்சனாலிட்டி பற்றி... இப்படி கடினமான கேள்விகளை வைத்திருக்கிறேன். நான் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கிறேன், நேரடி மெசேஜ் அனுப்புங்கள் ப்ளீஸ்” எனக் கேட்டிருக்கிறார்.
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, கனடா நாட்டு குடியுரிமை வைத்துள்ள ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் பேட்டி எடுத்ததை கிண்டலடிக்கும் வகையில் சித்தார்த் இப்படி ஒரு பதிவைப் போட்டிருக்கிறார் என்கிறார்கள். ஆனால், தன் பதிவில் நரேந்திரமோடி பற்றியோ, அக்ஷய்குமார் பற்றியோ சித்தார்த் குறிப்பிடவில்லை.