சினிமாவில் ஒவ்வொரு நாளும் போராட்டமே - ஐஸ்வர்ய லட்சுமி | ரூ.400 கோடி வட்டிக்கு வாங்கி எடுக்கப்பட்ட பாகுபலி : ராணா தகவல் | அடுத்த மாதம் ஜென்டில்மேன் 2 பட இசையை துவங்கும் கீரவாணி | ஆல்கஹால் தேவையில்லை.. டானிக்கே போதும் ; அதா ஷர்மாவின் அதிரடி | ஆந்திர முதல்வர் சுயசரிதையை படமாக்கும் ராம்கோபால் வர்மா | மகேஷ்பாபு படத்தில் மோகன்லாலை இணைக்க முயற்சி செய்யும் ராஜமவுலி | மலையாள பட விழாவில் விஜய் தேவரகொண்டா பட இயக்குனரை விமர்சித்த அல்லு அரவிந்த் | இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து மாறியிருக்கிறது - திரைப்பிரபலங்கள் இரங்கல் | வெற்றிகரமான 'வாரம்' இல்லை, வெற்றிகரமான 'நாட்கள்' மட்டுமே.. | ஆதிபுருஷ் படத்தின் புதிய டிரைலர் அப்டேட் |
குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடி வீரன் ஆகியப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் முத்தையா இயக்கியிருக்கும் திரைப்படம் 'தேவராட்டம்'. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஹீரோயினாக மஞ்சிமா மோகன் நடித்திருக்கிறார். போஸ் வெங்கட், வினோதினி உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அக்கா தம்பி பாசத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படம், மே 1ல் ரிலீசானது. 'தேவராட்டம்' படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், முழுப்படமும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதேப்போன்று அருள்நிதி நடிப்பில் வெளியாகி உள்ள த்ரில்லர் பமான கே 13 படமும் பைரசி இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதனால் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்கள் படக் குழுவினர்.
இதற்கிடையே லேட்டஸ்ட் திரைப்படங்களான 'கலாங், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம், கேம் ஆப் த்ரோன்ஸ் (வெப் சிரீஸ்)' ஆகியவைகளும் இந்தத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் ராக்கர்ஸ் போன்ற பைரசி இணையதளத்தை என்ன செய்வது என புரியாமல் தமிழ் சினிமா பட உலகம் தடுமாறி வருகிறது.